Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவைகுண்ட ஏகாதசி: ஒரே நாளில் கோடிக்கணக்கில் காணிக்கை பெற்ற திருப்பதி

    வைகுண்ட ஏகாதசி: ஒரே நாளில் கோடிக்கணக்கில் காணிக்கை பெற்ற திருப்பதி

    திருப்பதி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நேற்று இரவு உடன் நிறைவுபெற்றது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நேற்று இரவு நிறைவுபெற்றது. 

    இதைத்தொடர்ந்து, முறைப்படி வைகுண்ட சொர்க்கவாசல் அடைக்கப்பட்டது. கடந்த 2 ஆம் தேதி முதல் நேற்று 11 ஆம் தேதி வரை தினந்தோறும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் 25 ஆயிரம் ஆன்லைன்  சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் அளிக்கப்பட்டது. மேலும் 50 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

    வைகுண்ட ஏகாதசி முதல் நாள் பலரும் தரிசனம் செய்ததால், அன்று ஒரே நாளில் மட்டும் திருப்பதி உண்டியலுக்கு 7.68 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதே சமயம், இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களில் 2.50 லட்சம் பேர் தரிசனத்திற்கு செல்லவில்லை. இதன் அகரணமாக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. 

    மொத்தமாக ஏகாதசி நாட்களில் 6,09219 பேர் தரிசனம் மேற்கொண்டனர். 10 நாட்களில் மட்டும் 39.40 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூல் ஆகியது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியின் கடைசி நாளான நேற்று மட்டும் 68,855 பேர் தரிசனம் மேற்கொண்டனர்.

    நடிகர் விஜய்யின் வசனத்தை டிரெண்ட் செய்யும் பாஜகவினர்… காரணம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....