Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நடிகர் விஜய்யின் வசனத்தை டிரெண்ட் செய்யும் பாஜகவினர்... காரணம்?

    நடிகர் விஜய்யின் வசனத்தை டிரெண்ட் செய்யும் பாஜகவினர்… காரணம்?

    நடிகர் விஜய்யின் ‘5 நிமிஷத்துல ஆட்சியே மாறும்’ என்ற வாரிசு பட வசனத்தை பாஜகவினர் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். 

    நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம், வாரிசு. வம்சி பைடிபல்லி இயக்கி, தில் ராஜு தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வாரிசு கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், ரசிகர்கள் கொண்டாடி குதூகலித்து வாரிசு திரைப்படத்தை பார்த்து வருகின்றனர். 

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் கதாப்பாத்திரம் பேசியுள்ள அரசியல் சார்ந்த வசனம் ஒன்று இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. அதன்படி, ‘5 நிமிஷத்துல ஆட்சியே மாறும்’ என்று விஜய் பேசிய வசனத்தை பாஜக கட்சியினர் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

    தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக-விற்கும், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக-விற்கும் நேரடி மோதல் போக்கு நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக இரு கட்சிகளுக்கு இடையேவும் அதிகளவிலான மோதல் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.  

    இச்சூழலில்தான், நடிகர் விஜய்யின் ‘5 நிமிஷத்துல ஆட்சியே மாறும்’ என்ற வாரிசு பட வசனத்தை பாஜகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர். பாஜகவினரின் இந்த மோதல் முறை ட்விட்டரில் அரசியல் சார்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. 

    நான் ஒரு கோடி தருகிறேன், உயிரிழந்த எனது மகளையும் பேரனையும் தரமுடியுமா? – பலியான பெண்ணின் தந்தை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....