Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநான் ஒரு கோடி தருகிறேன், உயிரிழந்த எனது மகளையும் பேரனையும் தரமுடியுமா? - பலியான பெண்ணின்...

    நான் ஒரு கோடி தருகிறேன், உயிரிழந்த எனது மகளையும் பேரனையும் தரமுடியுமா? – பலியான பெண்ணின் தந்தை..

    பெங்களூரு மெட்ரோ தூண் விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவத்தில், ‘தனது மகளையும் பேரனையும் முதல்வர் மீட்டுத் தர முடியுமா’ என்று கேள்வி எழுப்பினார். 

    கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கட்டுமானப் பணியில் இருந்த தூண் ஒன்று விழுந்தது. அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் சென்ற மென்பொறியாளர் தேஜஸ்வினி மற்றும் அவரது மகன் விஹான் ஆகிய இருவர் மீதும் விழுந்தது. இதில் இவர்கள் இருவரும் உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் சென்ற தேஜஸ்வினியின் கணவர் லோஹித் சோலக் மற்றும் மகள் விஸ்வமிதா ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர்.

    இவர்களின் இறப்புக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 20 லட்சம் ரூபாயை இழப்பீடாக அறிவித்தது. மேலும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். 

    இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த தேஜஸ்வினியின் தந்தையான மதன்  செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர், இது இழப்பீடு குறித்து இல்லை என்றும், தனக்கு இழப்பீடு தேவையில்லை என்றும், அவர்களுக்கு தான் ஒரு கோடி தந்தால் தனது மகளையும் பேரனையும் முதல்வர் மீட்டுத் தர முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். 

    தொடர்ந்து பேசிய அவர், இது பணத்தை குறித்து இல்லை என்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் நாகர்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன்  கம்பெனி லிமிடெட் நிறுவனங்களில் குறைபாடு இருப்பதாகவும் கூறினார். 

    மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை அரசாங்கம் தடுத்து உயிர்களை காப்பாற்ற வேண்டும் என விரும்புவதாகவும், ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கோரினார். 

    இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....