Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

    இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

    உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

    உத்தர பிரதேசந மாநிலம் நொய்டாவில் செயல்படும் ‘மேரியன் பையோடெக்’ என்ற நிறுவனம் ‘டோக் 1 மேக்ஸ்’ என்ற இருமல் மருந்தை உஸ்பெகிஸ்தானில் உள்ள 18 குழந்தைகளுக்கு கொடுத்ததால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியது. மேலும் அந்த இருமல் மருந்தை பரிசோதனை செய்ததில் எத்தலின் கிளைக்கால் என்ற ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

    இதையடுத்து, மேரியன் பயோடெக் நிறுவனத்தின் டோக் 1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் என்ற இரண்டு இருமல் மருந்துகளை உலக சுகாதார அமைப்பு பரிசோதனை செய்தது. மேலும் இந்த இருமல் மருந்துகளில் அதிக அளவு எத்தலின் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த இரண்டு மருந்துகளும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றது அல்ல என தற்போது உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 

    முன்னதாக ஹரியானா மாநிலம், சோனிபட் மெய்டன் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மருந்து காரணமாக, மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் காரணமாக உலக அளவில் இந்திய மருந்துகளின் தயாரிப்பை பயன்படுத்துவதில் சர்ச்சை எழுந்துள்ளது.

    வாரிசு, துணிவு படக்குழுவுக்கு வந்த நல்ல செய்தி.. குஷியில் விநியோகஸ்தர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....