Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிகாரைக்காலில் சாதிபேதமின்றி பொங்கல் திருநாள்; சாதனைப் பட்டியலில் இடம்பெறுமா?

    காரைக்காலில் சாதிபேதமின்றி பொங்கல் திருநாள்; சாதனைப் பட்டியலில் இடம்பெறுமா?

    காரைக்காலில் தனியார் பள்ளி சார்பில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் பெற்றோர், ஆசிரியர்களுடன் மண்பானையில் பொங்கல் வைத்து பிரம்மாண்டமாக கொண்டாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    தமிழர்களின் பாரம்பரிய திருநாள்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது, பொங்கல். இந்த பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் சமத்துவ பொங்கலை சாதனை பொங்கலாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த வகையில் ரப்பா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை பதிவில் இடம் பெறுவதற்காக பள்ளி சார்பில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி 500-க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள் வைத்து மஞ்சள், இஞ்சி கொத்துகளை மாலையாக அணிவித்து அலங்கரித்து, பச்ச அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.

    பானை பொங்கி வரும் நேரத்தில் சாதி மத பாகுபாடின்றி அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று ஆரவரத்துடன் கோஷமிட்டனர். இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஒரே இடத்தில் மதநல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக ஏராளமானவர்கள் கூடி பிரமாண்டமான முறையில் பொங்கல் விழா கொண்டாடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

    அதிர்ச்சி தோல்வியில் பி.வி.சிந்து; முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....