Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

    தமிழர்களின் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவரவர் சொந்த  ஊர்களுக்கு செல்வர். அனைவரும் ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

    இதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் 14 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், மற்ற ஊர்களில் இருந்து 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. அதன்படி 12,13,14 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மொத்தம் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, கே.கே. நகர், தாம்பரம் ஆகிய ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், இந்தப் பேருந்து நிலையங்களுக்கு செல்ல 24 மணி நேரமும் மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 

    பேருந்துகளின் இயக்கம் மற்றும் புகார்களை தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதிர்ச்சி தோல்வியில் பி.வி.சிந்து; முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....