Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை..

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை..

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி, ஜில் பைடன். இவருக்கு 72 வயது. கடந்த ஜனவரி 4ஆம் தேதி வழக்கமாக நடைபெற்ற பரிசோதனையில் ஜில் பைடனுக்கு வலது கண் பகுதியில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, புதன்கிழமை மார்பகம் மற்றும் இடது கண் இமைப் பகுதியில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

    இந்நிலையில், இவர் மேரிலாந்தில் உள்ள தேசிய ராணுவ மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, ராணுவ மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் வலது கண் மற்றும் மார்பக பகுதிகளில் இருந்த புற்றுநோய் கட்டிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

    இந்த அறுவை சிகிச்சையின் போது, அதிபர் ஜோ பைடன்  சுமார் 9 மணிநேரம் மருத்துவமனையில் இருந்தார். அதன் பிறகு ஜோ பைடன் வெள்ளை மாளிகை திரும்பினார். 

    ஜில் பைடனின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை தெரிவிக்கையில், தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் ஜில் பைடன் நலமுடன் இருப்பதாகவும், இடது கண் இமைப் பகுதியிலுள்ள புற்றுநோய் கட்டியை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    காரைக்காலில் சாதிபேதமின்றி பொங்கல் திருநாள்; சாதனைப் பட்டியலில் இடம்பெறுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....