Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅதிர்ச்சி தோல்வியில் பி.வி.சிந்து; முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

    அதிர்ச்சி தோல்வியில் பி.வி.சிந்து; முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

    மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

    இந்திய பாட்மன்டனின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இவர் காயம் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக எந்தவித சர்வதேச போட்டியிலும் களம் காணாமல் இருந்தார். 

    இந்நிலையில், தற்போது பி.வி.சிந்து மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் முதல் சுற்றில் பி.வி.சிந்து கரோலினா மரின் என்ற ஸ்பெயின் வீராங்கனையை எதிர்கொண்டார்.

    தொடக்கத்தில் இருந்தே இந்த சுற்றானது விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால், யாரும் எதிர்பாரா விதமாக சிந்து 12-21, 21-10, 15-21 என்ற கேம்களில் மரினிடம் தோல்வி கண்டார். இந்த தோல்வியின் மூலம் மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இருந்து பி.வி.சிந்து வெளியேறினார். 

    மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் பங்குபெற்ற இந்தியரான மாளவிகா பன்சோத் 9-21, 13-21 என்ற கணக்கில் கொரியாவின் ஆன் சே யங்கிடம் வீழ்ந்தார்.

    வாரிசு, துணிவு படக்குழுவுக்கு வந்த நல்ல செய்தி.. குஷியில் விநியோகஸ்தர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....