Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம்: ஒப்புதல் அளித்த ஆளுநர்

    குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம்: ஒப்புதல் அளித்த ஆளுநர்

    குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    அரசின் மாதாந்திர உதவித்தொகை எதுவும் பெறாத 21 முதல் 55 வயதுக்குள் இருக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் புதுச்சேரியின் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் அறிவித்திருந்தது. 

    ஆனால், இதுவரையிலுமே குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வந்தனர். 

    இந்நிலையில், குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், ரூ.1,000 உதவித்தொகை தொடர்பான கோப்புகளில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

    இதனால் விரைவில் குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    தேசிய சின்னமாக மாறுகிறதா ராமர் பாலம்? – ஆலோசனையில் மத்திய அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....