Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதேசிய சின்னமாக மாறுகிறதா ராமர் பாலம்? - ஆலோசனையில் மத்திய அரசு

    தேசிய சின்னமாக மாறுகிறதா ராமர் பாலம்? – ஆலோசனையில் மத்திய அரசு

    ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தகவல் கூறியுள்ளார். 

    ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்ககோரும் மனு மீதான பதிலை வருகிற பிப்ரவரி மாத முதல் வாரத்தில் அளிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம், ராமர் பாலம் வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பிப்ரவரி முதல் வாரம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம், தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரும் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு பிப்ரவரி மாதம் 2-வது வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சேது சமுத்திர திட்டம் காரணமாக ராமர் பால கட்டமைப்பு பாதிக்கப்படும் என சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். 

    இதனிடையே, ராமேஷ்வரம் கடற்கரையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வெளிவந்த வாரிசு, துணிவு வசூல் விவரம்; ‘நம்பர்-1’ யாரு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....