Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி; மசோதா நிறைவேற்றம்

    அமெரிக்காவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி; மசோதா நிறைவேற்றம்

    அமெரிக்காவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வருகிறது. இதனை உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்  உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். 

    அதே நேரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள விதிமுறைகளை பின்பற்றியே தீபாவளி பண்டிகையை கொண்டாடும் சூழல் நிலவி வருகிறது. இருப்பினும் பல நாடுகளில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடித்து கொண்டாட அனுமதி என்பது இல்லாத நிலையே உள்ளது. 

    இந்நிலையில், அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுவிடுமுறை மற்றும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கும் மசோதா மாகாண சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த காலத்தில் மட்டும் 5 நாட்களுக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகை மாகாண பொதுவிடுமுறை பட்டியலுக்குள் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    காதல் மாதம்; இவையெல்லாம் அவசியமா? – இன்றைய ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....