Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்விக்கிப்பீடியாவுக்கு விதித்த தடையை விலக்கிக் கொண்ட பாகிஸ்தான்

    விக்கிப்பீடியாவுக்கு விதித்த தடையை விலக்கிக் கொண்ட பாகிஸ்தான்

    பிரபல இணையதளமான விக்கிப்பீடியாவுக்கு பாகிஸ்தானில் விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டது. 

    இஸ்லாமிய மதத்தினரை அதிகளவு கொண்ட நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானில் மதம் மற்றும் கடவுளை விமர்சனம் செய்பவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. மதநிந்தனையில் ஈடுபட்டதாக பலர் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. 

    இந்நிலையில், இணையதள தேடுதல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இஸ்லாமிய மதம், கடவுளுக்கு எதிரான மற்றும் அவதூறு கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகவும், மதநிந்தனை தொடர்பான அந்தக் கருத்துகளை விக்கிப்பீடியா 48 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என பாகிஸ்தான் தொலைத்தொடர்புதுறை உத்தரவிட்டது. இருப்பினும் விக்கிப்பீடியா எந்த ஒரு கருத்துகளையும் நீக்கவில்லை. 

    இதன் காரணமாக, மதம் மற்றும் கடவுளை அவமதிக்கும் வகையிலான மத நிந்தனை தொடர்பான அவதூறு கருத்துகள் நீக்கப்படாமல் இருந்ததால், பாகிஸ்தான் அரசு விக்கிப்பீடியா இணையதளத்தை கடந்த 5 ஆம் தேதி முடக்கியது. 

    இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக, இந்த விவகாரத்துக்கான அமைச்சரவைக் குழுவின் பரிந்துரைப்படி தற்போது தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

    அமெரிக்காவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி; மசோதா நிறைவேற்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....