Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇரண்டு பாஜக அமைச்சர்கள் ராஜிநாமா!

    இரண்டு பாஜக அமைச்சர்கள் ராஜிநாமா!

    பாஜக கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவியை நேற்று ராஜிநாமா செய்துள்ளனர்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர்சிபி சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தங்களுடைய அமைச்சர்கள் பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளனர்.

    மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மத்திய அமைச்சர்கள் இருவர், எம்.பி பதவிக்காலம் நிறைவடையும்போது மீண்டும் அது தொடர வாய்ப்பளிக்கப்படாமல் பதவி விலகுவது இதுவே முதல் முறை என கருதப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு அமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

    பீகாரில் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வந்த ஆர்சிபி சிங், 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தபோது அமைச்சராகப் பதவியேற்றார். சரியாக ஒரு வருட பதவிக்காலத்துக்கு பிறகு அவர் ராஜிநாமா செய்துள்ளார்.

    இதையடுத்து துணைக் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக முக்தார் அப்பாஸ் நக்வி, பாஜக தரப்பில் அறிவிக்கப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து, துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் ஜூலை 5ம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி  வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 19ம் தேதியாகும். தேர்தல் நடைபெறும் நாளாக ஆகஸ்ட் 6ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலை அடுத்து பாஜக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை  ஜூலை 7ம் தேதி அறிவிக்கலாம் எனவும், ஏற்கனவே நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் முக்தார் அப்பாஸ் நக்விக்கு உள்ளது. எனவே அவரது பெயர் கட்சி மேலிடத்தால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக என தகவல்கள் வெளியாகின்றன.

    உச்சநீதிமன்றம் கூறிய பின்பு நங்கள் என்ன செய்ய முடியும்- உயர்நீதிமன்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....