Sunday, March 17, 2024
மேலும்
    Homeவானிலைகர்நாடக மற்றும் மராட்டிய மாநிலங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

    கர்நாடக மற்றும் மராட்டிய மாநிலங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

    புதுதில்லி: கர்நாடக மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

    கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் மல்நாடு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு, கனமழையின் காரணமாக அதிக பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. 

    கர்நாடகாவில் பெய்து அவரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதேபோல், விவசாய வயல்களிலும் மழைநீர் புகுந்துள்ளது. 

    வெள்ளம் பாதித்த பகுதிகளில், வசிக்கும் பொதுமக்களை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். மேலும், வெள்ள நீர் சூழ்ந்துள்ள மாவட்டங்களின் துணை ஆணையர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறித்தியுள்ளார். 

    இதனிடையே, கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    மேலும், மராட்டிய மாநிலம், மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மராட்டியம் மற்றும் கோவா பகுதிகளில் மிக கனமழை என்று குறிப்பிடப்படும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜிநாமா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....