Thursday, May 9, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ட்விட்டரில் தொடரும் பணி நீக்கம்.. இந்த ஆண்டும் அதிர்ச்சி

    ட்விட்டரில் தொடரும் பணி நீக்கம்.. இந்த ஆண்டும் அதிர்ச்சி

    ட்விட்டரில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுவில் பணியமர்த்தப்பட்டிருந்த ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார். அவர் கைப்பற்றியதுக்குப் பிறகு ட்விட்டரில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின. அவற்றுள் பல சர்ச்சைக்கு உள்ளாகின. 

    குறிப்பாக, ட்விட்டரில் நிகழ்ந்த பணியாளர் நீக்க நடவடிக்கையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனின் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு 3500-க்கும் அதிகமான பணியாளர்களை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. 

    இந்நிலையில், இந்த ஆண்டும் ட்விட்டர் நிறுவனத்தின் குறிப்பிட்ட பிரிவில் ஊழியர்கள் நீக்க நடவடிக்கையானது அரங்கேறியுள்ளது. அதன்படி, ட்விட்டர் தளத்தில் ட்வீட்டுகளை கண்காணிக்கும் முக்கியப் பிரிவான நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுவில் பணியமர்த்தப்பட்டிருந்த ஏராளமான ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோர் அயர்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாட்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

    ரஜினியின் ஜெயிலரில் மோகன்லால்…. என்ன சொல்கிறது படக்குழு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....