Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரஜினியின் ஜெயிலரில் மோகன்லால்.... என்ன சொல்கிறது படக்குழு?

    ரஜினியின் ஜெயிலரில் மோகன்லால்…. என்ன சொல்கிறது படக்குழு?

    ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லால் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான், ஜெயிலர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இதைத்தொடர்ந்து வெளிவந்த ஜெயிலர் பட முதல் பார்வை நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதைத்தொடர்ந்து, ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலை ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. 

    மேலும், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு கடந்த மாதம் வெளியிட்ட வீடியோ  ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து, ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் பரவி வந்தன. 

    jaielr

     

    இந்நிலையில், படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லால் நடிப்பது குறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

    ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேலும், இத்திரைப்படமானது, வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    மாநகரப் பேருந்தில் பெண்ணிடம் வினோத செயலைக் காட்டிய நபர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....