Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்'குப்புற படுத்தால் மார்பக புற்றுநோயா?' - சித்த மருத்துவருக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்

    ‘குப்புற படுத்தால் மார்பக புற்றுநோயா?’ – சித்த மருத்துவருக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்

    பெண் சித்த மருத்துவரான ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

    சித்த மருத்துவரான ஷர்மிகா இணையத்தில் மிகவும் பிரபலமானவர். இவரின் மருத்துவ குறிப்புகள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக ஷர்மிகா மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தன. 

    இதனிடையே, சித்த மருத்துவரான ஷர்மிகா குலாப்ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும் என்றும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என்றும், கர்பம் மற்றும் உடல் எடை குறைப்பு போன்ற சில சர்ச்சையான கருத்துகளை ஆலோசனையாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகா வெளியிட்ட கருத்துகள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

    இந்தப் புகாரின் பேரில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க மருத்துவர் ஷர்மிகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    சூர்யகுமார் யாதவ் அதிரடியால் வெற்றி பெருமூச்சு விட்ட இந்தியா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....