Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொடூரமான கொலை சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் -மு.க ஸ்டாலின்..

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொடூரமான கொலை சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் -மு.க ஸ்டாலின்..

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகளோ அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது, பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்நிகழ்வு பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியது. 

    இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, தற்போது அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், இறுதி அறிக்கையை நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. 

    இந்நிலையில், அந்த தீர்மானம் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியதாவது: 

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். ஏற்கனவே உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 

    தூத்துக்குடி மாவட்டத்தின், அப்போதைய மாவட்ட ஆட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை பொதுத்துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினை சேர்ந்த மூன்று வருவாய் துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்.

    கொடூரமான கொலை தாக்குதல்களை அறையில் அமர்ந்து வர்ணனைகளாகக் கேட்டுவிட்டு வெளியில் வந்து தனக்கு எதுவும் தெரியாது என எடப்பாடி பழனிசாமி பொய் கூறியுள்ளார். இதற்கான தண்டனையை தேர்தல் மூலமாக தமிழக மக்கள் அதிமுகவிற்கு வழங்கினர். 

    நீதியரசர் அருணா ஜெகதீசன் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபடாத 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட 93 பேருக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்பட்டது. 

    அருணா ஜெகதீசன் ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை அரசு ஆய்வு செய்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்ததுபோல் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகளோ அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்,

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ‘நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்’ கடவுளிடம் கோரிக்கையையும், ரசிகர்களிடம் கேள்வியையும் முன்வைத்த விஜய் ஆண்டனி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....