Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே தலைவர் யார் என்பதை அறிவித்த ராகுல் காந்தி!

    அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே தலைவர் யார் என்பதை அறிவித்த ராகுல் காந்தி!

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே கட்சியின் தலைவர் கார்கே என ராகுல் காந்தி தெரிவித்தது தற்போது பேசும் பொருளாகியுள்ளது. 

    காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.  இதில் 9,915 மாநில காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அதில் 9,500 வாக்களித்தனர். அனைத்து மாநில வாக்கு பெட்டிகளும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

    இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். மேலும் 416 வாக்குகள் செல்லத்தாவை என அறிவிக்கப்பட்டன. 

    இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கட்சியின் தலைவர் அக்கருகே தான் என்பதை ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

    ஆந்திராவில் ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அடோனியில் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது, கட்சியில் உங்களுக்கு என்ன பதவி என்று செய்தியாளரிடம் கேட்க அதற்கு ராகுல் காந்தி, கட்சியில் எனக்கு என்ன பதவி என்பதை கார்கே மற்றும் சோனியா காந்தியிடம் கேளுங்கள் என பதிலளித்தார். என்னுடைய பணி என்பதைக் கட்சித் தலைவர் முடிவு செய்வார் என தெரிவித்தார். 

    இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே! 24 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த புதிய மாற்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....