Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்; ஒன்பதாயிரத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை!

    துருக்கி நிலநடுக்கம்; ஒன்பதாயிரத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை!

    துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதுவரை 9,500 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம், துருக்கியில் பல்வேறு அசம்பாவிதங்களை நிகழ்த்தி வருகிறது.

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால், பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இதனால் துருக்கியில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைக்கின்றன. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை சிரியா – துருக்கியில் 9,500 பேர் பலியாகி உள்ளனர். பிப்ரவரி ஆறாம் தேதியில் இருந்து ஏழு நாட்களுக்கு துருக்கியில் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், பாதிப்பு கடுமையாக இருப்பதால், இரு நாடுகளிலும் உயிரிழப்பு 20,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. இச்சூழலில், துருக்கிக்கு மீட்புப் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து 100 வீரர்களை கொண்ட 2 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களுக்கு 3 மாதக்கால அவசர நிலையை துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பிராமணர் சமூகத்தினரை ஆர்எஸ்எஸ் தலைவர் இழிவுபடுத்தியத்தாக குற்றச்சாட்டு; பதில் அளித்த ஆர்எஸ்எஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....