Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஜன்னல் ஓர இருக்கைக்கு முன்பதிவு செய்திருந்த விமான பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

    ஜன்னல் ஓர இருக்கைக்கு முன்பதிவு செய்திருந்த விமான பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

    ஜன்னல் ஓரத்தின் இருக்கை வேண்டும் என முன்பதிவு செய்திருந்த விமான பயணி ஒருவருக்கு, பயணத்தின்போது பெரிய அதிர்ச்சியே காத்திருந்தது. 

    பொதுவாக பயணங்களின்போது ஜன்னல் ஓரத்தின் இருக்கையில், அமர பலருக்கும் பிடிக்கும். வேடிக்கை பார்த்தபடி நன்றாக காற்று வாங்கிக் கொண்டே செல்லவும் அப்போது மெல்லிசை கேட்கவும் பலரும் விரும்புவர். 

    அந்த வகையில், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது அங்கிருக்கும் அழகான காட்சியை காண வேண்டும் என்பதற்கு அனிருத் என்பவர் பிரிட்டிஷ் ஏர்வேஸில் முன்பதிவு செய்தார். விமானத்தில் ஏறிய அவருக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது. 

    அனிருத் முன்பதிவு செய்திருந்த ஜன்னல் இருக்கையில் ஜன்னலே இல்லை. இதனால் கோபம்கொண்ட அனிருத், தன்னுடைய ஜன்னலோர இருக்கை எங்கே என கேள்வி கேட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து அந்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார். 

    இதற்கு எந்த பதிலும் அளிக்காத அந்நிறுவனத்தை மீண்டும் டேக் செய்து, நான் கேட்டதற்கு பதில் எங்கே? என திரும்பவும் கேட்டுள்ளார். இவர் பயணித்த அதே விமானத்தில் பறந்த மற்றொரு பயணி, தான் எடுத்த விடீயோவை பகிர்ந்து தானும் அந்த விமானத்தில் தான் இருந்ததாக தெரிவித்துள்ளார். தற்போது இந்தப் பதிவுகள் ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது. 

    ஆறு ஆண்டுகளில் உயர் கல்விக்காக 30 லட்சம் பேர் இந்தியாவிலிருந்து அயல்நாடுகளுக்கு பயணம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....