Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சி புதிய விமான நிலையம் எப்போது திறக்கப்படும்?

    திருச்சி புதிய விமான நிலையம் எப்போது திறக்கப்படும்?

    திருச்சி புதிய விமான நிலையம் ஜூன் மாதத்தில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    திருச்சி விமான நிலையம் 951 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் ஒரே நேரத்தில் சுமார் 2,900 பயணிகள் வந்து செல்லும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 

    இந்த திருச்சி விமான நிலைய விரிவாக்க திட்டத்தில், 48 பயணிகள் வருகை மையங்களும் 10 போர்டிங் பாலங்கள் என பல நவீன வசதிகளுடன், பயணிகளின் வருகையை விரைவாக்கவும், அவர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது கட்டப்பட்டு வரும் இந்த புதிய கட்டமைப்புகள் சுமார் 75 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. 

    திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதிய முனையம் கட்டும் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்று இருக்கின்றன. மேலும் மீதம் இருக்கும் பணிகள் அனைத்தும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

    இந்தப் பணிகள் முடிந்த பிறகு, ஒத்திகை நடைபெறும். இதையடுத்து, ஜூன் மாதம் புதிய முனையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வைகுண்ட ஏகாதசி: ஒரே நாளில் கோடிக்கணக்கில் காணிக்கை பெற்ற திருப்பதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....