Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா vs இலங்கை: தடுமாறிய இந்திய அணிக்கு கைக்கொடுத்த கே.எல்.ராகுல்!

    இந்தியா vs இலங்கை: தடுமாறிய இந்திய அணிக்கு கைக்கொடுத்த கே.எல்.ராகுல்!

    இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. 

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இலங்கை அணி விளையாடி வருகிறது. 

    இதில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் தொடங்கியது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. 

    இந்நிலையில், நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. 

    அதன்படி, தொடக்க வீரராக அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் நுவனீடு ஃபெர்னாண்டோ களமிறங்கினர். 20 ரன்களில் அவிஷ்கா பெவிலியன் திரும்ப இதைத்தொடர்ந்து, களமிறங்கிய குசால் மெண்டிஸ் நிதானமாக விளையாட 34 ரன்களில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து வெளிவந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காமல் தங்களது விக்கெட்டை இழக்க, நுவனீடு ஃபெர்னாண்டோ மட்டும் அதிகபட்சமாக 50 ரன்கள் அடித்தார். 

    மொத்தத்தில் இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியத் தரப்பில் சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் அக்ஷர் படேல் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள். இதையடுத்து, இந்திய அணி 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கியது. 

    எளிதான இலக்கை அடைய இந்திய அணி களம்கண்டாலும், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்பினர். கேப்டன் ரோஹித் சர்மா 17, ஷுப்மன் கில் 21, விராட் கோலி 4, ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களுக்கு நடையைக் கட்ட, 86 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அணி. 

    இவர்களைத் தொடர்ந்து, களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களில்,  கே.எல்.ராகுல் – ஹார்திக் பாண்டியா கூட்டணி நிலைத்து ஆடி 75 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணியின் தடுமாற்றம் சற்றே நின்றது. பாண்டியா 36 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த அக்ஸர் படேல் 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 

    இருப்பினும், ராகுல் நிலைத்து ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார். முடிவில் கே.எல்.ராகுல் 64 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. 

    இறந்தவர்கள் கனவில் வருவதால் என்ன பலன்கள் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....