Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇப்படியொரு உணவகம் போன அனுபவம் உண்டா? வாடிக்கையாளர்களை கவர இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி

    இப்படியொரு உணவகம் போன அனுபவம் உண்டா? வாடிக்கையாளர்களை கவர இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி

    பழைய ரயில் பெட்டிகளை மறுசுழற்சி முறையில் உணவகமாக மாற்றியமைத்து இந்திய ரயில்வே அனைவரையும் ஆச்சர்யமடைய வைத்துள்ளது. 

    பலருக்கும் ரயில் பயணம் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடி, பிடித்த பாடல்களை கேட்டபடி இயற்கையை ரசித்து கொண்டே செல்வது மன நிம்மதியை கொடுக்கும். அப்படிப்பட்ட ரயில் பயணங்களில் உணவு உண்டு கொண்டே குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பொழுதை கழித்தவாறே செல்வது இன்னும் சில பலபேருக்கு பிடிக்கும். 

    அதற்கு ரயிலில் பயணத்தபடியே தான் செல்ல வேண்டும் என்று இல்லை. அந்தச் சூழலில் இருக்கும் இடத்திலேயே அப்படியான உணர்வை தரக்கூடிய அளவில் பொழுதை கழிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு ரயில் உணவகத்தை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது. 

    மேற்கு வங்க மாநிலம், புதிய ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் பழைய ரயில் பெட்டிகளை புனரமைத்து ரயில் கோச் ரெஸ்ட்டாரென்ட் என்ற மிகச் சிறப்பான உணவகம் ஒன்றை வடகிழக்கு ரயில்வே நிர்வாகம் உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த மாணவி சத்திய வழக்கு: 4 பேரிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலமா?

    Imageஇந்த ரயில் உணவகத்தில் குறைந்த விலைகளில் உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. இந்த உணவகத்தில் பிரியாணி, பிரைடு ரைஸ், சில்லி சிக்கன், மொமோஸ், தோசை, டீ போன்ற உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. 

    மேலும் உலகம் முழுவதும் பல்வேறு உலக நாடுகள் பழைய பொருள்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதற்கான முறைகளை கையாண்டு வருகின்றன. அப்படி நமது தரப்பில் இருந்து நாம் செய்வது சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து ஏதோ ஒரு வகையில் செய்யும் உதவியாக இருக்கலாம். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....