Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசு பள்ளியில் கைவரிசை காட்டிய பாலிடெக்னிக் மாணவர்: கம்ப்யூட்டர் திருடியதால் ஏற்பட்ட சோகம்!

    அரசு பள்ளியில் கைவரிசை காட்டிய பாலிடெக்னிக் மாணவர்: கம்ப்யூட்டர் திருடியதால் ஏற்பட்ட சோகம்!

    புதுச்சேரியில் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருடிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி திருவண்டார் கோயில் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டிருந்தன. இது குறித்து பள்ளி துணை முதல்வர் சாந்தா தேவி திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். எஸ் ஐ ராஜசேகர் புகாரை பெற்றுக் கொண்டு திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று திருவண்டார் கோயில் கடைவீதியில் சாக்குப் பையில் மூட்டை கட்டிக்கொண்டு தலையில் தூக்கி சென்றவாறு ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அழைத்து சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது அதில் ஒரு கம்ப்யூட்டர் இருந்தது தெரியவந்தது.

    உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர் திருவண்டார்கோயில் சின்ன பேட் பகுதியை சேர்ந்தவர் என்பதும், தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்யப்பட்டதில் அவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கம்ப்யூட்டரை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார்.

    அவருடைய வீட்டில் இருந்து இரண்டு மானிட்டர்கள், இரண்டு சிபியு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து வேறு ஏதேனும் திருட்டில் ஈடுபட்டாரா என்று என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....