Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுவைத் தமிழ்ச்சங்கத்திற்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப்பேராய விருது: எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் அறிவிப்பு

    புதுவைத் தமிழ்ச்சங்கத்திற்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப்பேராய விருது: எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் அறிவிப்பு

    புதுச்சேரியில் 100 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் தமிழ், திருக்குறள் மாநாடு நடத்தி திருக்குறளை லத்தீன், பிரெஞ்சு மொழியில் மெழிபெயர்ப்பு செய்து தமிழறிஞர்களை கவுரவித்தும், தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு வரும் புதுவைத் தமிழ்ச்சங்கத்திற்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப்பேராய விருது அறிவிக்கப்பட்டுள்ளது புதுச்சேரிக்கு பெருமையை சேர்த்துள்ளது.

    எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் தமிழ் பேராயம் ஆண்டு தோறும், சிறந்த தமிழ் நுால், தமிழ் இதழ், தமிழ்ச் சங்கம், சிறந்த தமிழறிஞர் ஆகிய பிரிவுகளில், 12 தலைப்புகளில் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும் தமிழ்ப்பேராய விருதுகளை அறிவித்துள்ளது. அதன்படி புதுவை தமிழ்ச்சங்கத்திற்கு தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வெங்கட்டா நகரில் 100 ஆண்டுகளுக்கு மேலாக புதுவைத் தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது. இங்கு தமிழ்ச்சங்கம் தொடங்கியது முதல் தற்போழுது வரை தமிழறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழ் மாநாடு மற்றும் திருக்குறள் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழ் தொடர்பான கருத்தரங்கங்கள், கவியரங்கங்கள், தமிழகம் முழுவதும் உள்ள தமிழிறிஞர்களை பாராட்டுவது, உலகளவில் உள்ள தமிழறிஞர்களை வரவழைத்து பாராட்டியது மற்றும் ஆண்டுதோறும் தமிழ் நாட்காட்டி வெளியிடுவது போன்ற செயல்களை செய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் பல தமிழ் நூல்களை வெளியிட்டு எழுத்தாளர்களை ஊக்குவித்தும் வருகிறது புதுவைத் தமிழ்ச்சங்கம். இதன் ஒரு படி மேலே சென்று திருக்குறளை லத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளது சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது.

    மேலும் தமிழ்ச்சங்க வளாகத்தில் திருவள்ளுவருக்கு என சிலை நிறுவி மாதந்தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள். இவ்வாறு பல சிறப்புகளை பெற்ற புதுவைத் தமிழ்ச்சங்கத்திற்கு எஸ்.ஆர்.எம். இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதை அறிவித்து பெருமை சேர்த்துள்ளது. அதாவது புதுவைத் தமிழ்ச்சங்த்திற்கு தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது வழங்க உள்ளது. இந்த விருதால் புதுச்சேரியில் உள்ள தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

    தற்போது புதுவைத் தமிழ்ச்சங்க தலைவராக முத்து, செயலாளராக சீனுமோகன்தாஸ் ஆகியோர் உள்ளனர். விருது அறிவிப்பு குறித்து பேசிய புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முத்து, தமிழகம் முழுவதும் தமிழ்சங்கங்கள் இருந்தாலும் புதுவைத் தமிழ்ச்சங்கத்திற்கு தமிழ்ப்பேராய விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இது புதுச்சேரியை சேர்ந்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், புதுவைத்தமிழ் சங்க நிர்வாகிக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், விருது அறிவித்துள்ள எஸ்.ஆர்.எம் மற்றும் பாரிவேந்தருக்கு நன்றியை தெரிவித்துகொள்வதாக கூறினார்.

    மக்களே உஷார்! அண்டை மாநிலங்களில் அதிகரித்து வரும் தட்டம்மை பாதிப்பு – மத்திய அரசு தீவிர ஆய்வு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....