Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்'பெண்கள் இல்லத்தரசிகள் மட்டுமே இல்லை' - ஐநா சபையில் தூதர் பேச்சு..

    ‘பெண்கள் இல்லத்தரசிகள் மட்டுமே இல்லை’ – ஐநா சபையில் தூதர் பேச்சு..

    புதிய தொழில்நுட்ப உதவியுடன் மகளிர் மற்றும் சிறுமிகள் பலன் அடையும் வகையில் நவீன இந்தியா செயல்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் இந்திய தூதர் பேசியுள்ளார். 

    பெண்களை முக்கியத்துவம் படுத்தும் வகையில் சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் ருசிரா கம்போஜ், மகளிர் மற்றும் சிறுமிகள் பலன் அடைவதற்காக புதிய தொழில் நுட்பங்களை குவித்து புதிய இந்தியா இன்று செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 

    பெண்கள் இனி இல்லத்தரசிகளாக மட்டுமே பார்க்கப்பட கூடாது எனவும், அவர்கள் நாட்டை கட்டமைப்பவர்களாகவும் பார்க்கப்பட வேண்டும் என்று சந்தேகமின்றி தெரிவித்த பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை அடிப்படையாக கொண்டு செயல்படுவதாகவும் ருசிரா கம்போஜ் தெரிவித்தார். 

    தொடர்ந்து பேசிய அவர், இந்தியா இன்று மகளிருக்கான வளர்ச்சி என்ற மாடலில் இருந்து மகளிர் தலைமையிலான வளர்ச்சி என்ற உருமாற்றம் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். 

    மேலும் தங்களது தலைமையிலான ஜி-20 மாநாட்டில் மகளிர் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது என்ற முடிவை எடுப்பதில் இந்தியாவின் உருமாற்றம் பிரதிபலித்து இருப்பதாக ருசிரா கம்போஜ் கூறினார். 

    வருங்காலத்திற்கு நாம் தயாராக வேண்டும் என்றால், கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் விவாதத்தின் மைய பொருளாக மற்றும் முடிவை எடுக்கும் நடைமுறை ஆகியவற்றில் மகளிரை இடம்பெறச் செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என இந்திய தூதர் ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார். 

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....