Sunday, March 17, 2024
மேலும்
    Homeவானிலைதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

    சென்னை: தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நண்பகல் 12.30 மணிக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 

    கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 

    இன்று 07.03.2023 தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது  அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். 

    08.03.2023 முதல் 10.03.2023 வரை: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    11.03.2023: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும். 

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு சென்டிமீட்டரில்: ஏதுமில்லை.  

    மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. 

    விஜய்யின் லியோ படத்தில் புதிய டெக்னாலஜி; ஆவலில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....