Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅதிகரித்து வரும் தட்டம்மை தொற்று; 135 பேர் பாதிப்பு!

    அதிகரித்து வரும் தட்டம்மை தொற்று; 135 பேர் பாதிப்பு!

    மத்திய பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 135 பேருக்கு தட்டம்மை தொற்று பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    மத்திய பிரதேச மாநிலத்தில் தட்டம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. அதே சமயம், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஜபால்புர், நர்சிங்க்புர், புரான்புர், இந்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் 135 பேருக்கு தட்டம்மை தொற்று பரவி இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த 4 மாவட்டங்கள் தொற்றின் மையமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஜபால்புர் மற்றும் இந்தூரில் 2 பேர் தட்டம்மை தொற்றால் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தட்டம்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாக நேஷனல் மிஷனின் இயக்குநர் மருத்துவர் சந்தோஷ் சுக்லா தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு தட்டம்மை உறுதியானால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார். 

    அதே சமயம் மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் கூடிய தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தெரிந்தால், அவர்கள் தேர்வுகள் எழுதக்கூட அனுமதிக்கப்படுவது இல்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முகவரி மற்றும் விவரங்களை அந்தந்த பள்ளிகளே சுகாதாரத்துறைக்கு அனுப்பி வருகின்றன. 

    குறிப்பாக பொதுமக்களுக்கு தட்டம்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

    இனிமேல் இந்த தங்க நகைகள் எல்லாம் விற்பனைக்கு கிடையாது…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....