Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபள்ளித்திறப்பு; இன்முகத்தோடு மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்!

    பள்ளித்திறப்பு; இன்முகத்தோடு மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்!

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் கடந்த 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவையும் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் புதுச்சேரியில் இன்று முதலே பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு இறுதி தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. தேர்வுகள் முடியும் முன்பே ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

    இந்த நிலையில், புதுவை, காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு இன்று (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது. முன்னதாக பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, கட்டிடங்களில் பழுதுகளும் சீரமைக்கப்பட்டது. ஸ்மார்ட் வகுப்பறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனைங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டன.

    இன்று காலை அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி வந்த மாணவர்களை ஆசிரியர்-ஆசிரியைகள் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். இதனால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர். அதே வேளையில் இன்றும், நாளையும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

    மேலும் மாணவர் சிறப்பு பேருந்துகளை மீண்டும் இயக்குவது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அதே சமயம் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு, ஜூலை 11-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

    அதிமுக பொதுக்குழு: நேரடி செய்திகள்.. என்னவெல்லாம் இனி நடக்கும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....