Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக பொதுக்குழு: நேரடி செய்திகள்.. என்னவெல்லாம் இனி நடக்கும்?

    அதிமுக பொதுக்குழு: நேரடி செய்திகள்.. என்னவெல்லாம் இனி நடக்கும்?

    அவைத்தலைவருக்குப் பிறகு பேசிய சி.வி.சண்முகம் அவர்கள் அவைத்தலைவர், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு 2600 உறுப்பினர்களின் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றினை சமர்ப்பிப்பதாகக் கூறினார்.

    இந்தக் கடிதத்தினை வாசித்த சி.வி.சண்முகம், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பிறகு கட்சியானது இருவரால் நிர்வாகிக்கப்பட்டது. இதனால் தொண்டர்களும், உறுப்பினர்களும் மிகவும் குழப்பமுற்றுள்ளனர்.

    முடிவுகள் தெளிவாக எடுக்க முடியாததனால் தொண்டர்கள் மிகவும் சோர்வுற்றுள்ளனர் என்று குறிப்பிட்ட சண்முகம் தொடர்ந்து, கட்சியினை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கவும், தெடர்ந்து பயணிக்கவும் ஒற்றைத்தலைமை தேவை என்று கூறினார்.

    எனவே, ஒற்றைத்தலைமை குறித்த குறித்த தீர்மானத்தினை முடிவு செய்து அடுத்த பொதுக்கூட்டத்திற்கான நாளினைக் கூறும்படியும் கூறினார். இதன்பிறகு அந்த கடிதத்தினை அவைத்தலைவராக அறிவிக்கப்பட்ட தமிழ்மகன் உசேனிடம் அளித்தார் சி.வி.சண்முகம்.

    கடிதத்தினைப் பெற்றுக்கொண்ட தமிழ்மகன் உசேன், உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தினை ஏற்று ஒற்றைத்தலைமை குறித்த தீர்மானத்திற்கான பொதுக்குழு அடுத்த மாதம் 11ம் தேதி காலை 9:15 மணிக்கு நடத்தப்பட்டும் என்று அறிவித்தார்.

    தமிழ்மகன் உசேன் பேசிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்தினை நிராகரித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினார். சட்டத்திற்கு புறம்பாக இந்த கூட்டம் நடைபெறுகிறது என வைத்தியலிங்கமும், ஓ.பன்னீர்செல்வமும் முழக்கமிட்டபின் மேடையினை விட்டு வெளியேறினார்.

    கூட்டத்தினை விட்டு வளியேறிய ஓ.பன்னீர்செல்வம் தனது வாகனத்தில் ஏறி புறப்பட்டார். அவரது வாகனத்தின் பின்னால் நின்று எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள், ‘ஒற்றைத்தலைவர் பழனிசாமி’ போன்ற கோஷங்களை எழுப்பினர்.

    23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால் அதன் மீதான இரங்கல் பேச்சு முடிந்த நிலையில் பொதுக்குழுவானது முடிவுபெற்றதாக அறிவிக்கப்பட்டது. கட்சி உறுப்பினர்களும், தொண்டர்களும் மதிய உணவு உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

    குழப்பமும் கூச்சலுக்குமிடையே இந்த கூட்டமானது முடிவிற்கு வந்துள்ளது. எனினும் ஒற்றைத்தலைமை குறித்த பிரச்சனை பற்றிய எந்தவித முடிவினையும் எடுக்காமல் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஒற்றைத்தலைமை குறித்த இந்த பிரச்சனையினை ஓ.பன்னீசெல்வம் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. போதுமான ஆதரவாளர்கள் அவரிடம் இல்லாத நிலையில், சட்டரீதியாக போராடுவாரா என்பது தெரியாமல் உள்ளது.

    மேலும், கட்சி இரண்டாகப் பிரிந்தால் இரட்டை இலை சின்னமானது யாருக்குச் சொந்தமாகும் என்ற கேள்வியும் நமது முன்னே உள்ளது.

    அதிமுக பொதுக்குழு: நேரடி செய்திகள்..கழகத்தின் பொதுச்செயலாளர் இபிஎஸ் என முழுக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....