Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்த நாடுகளில் எல்லாம் ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டுமாம்! இதோ லிஸ்ட்!

    இந்த நாடுகளில் எல்லாம் ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டுமாம்! இதோ லிஸ்ட்!

    இந்திய இராணுவத்தில், “அக்னிபாத்” எனும் புதிய வேலைவாய்ப்புத் திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயிற்சி பெறும் வீரர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில், 4 வருடங்களுக்கு வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் 4 ஆண்டுகள் பணியை வெற்றிகரமாக முடிப்பவர்களில், 25% பேர் மட்டுமே நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். இந்நிலையில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாள்முதல் இன்று வரையிலும், இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இருப்பினும், பாஜக எம்எல்ஏ-க்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    பல வெளிநாட்டு இராணுவங்களில், கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை. இந்த குறுகிய கால இராணுவ வேலையில், வேலை நிரந்தரம் இல்லை என இந்திய இளைஞர்கள் கருதுகின்றனர். இராணுவத்திற்கு சேவை ஆற்றுவதை கட்டாயமாக்கியிருக்கும் நாடுகள் எவை, அதன் விதிமுறைகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.

    இஸ்ரேல்

    இஸ்ரேல் இராணுவத்தில் சேவை ஆற்றுவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டாயமாகும். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளில் ஆண்கள் 3 ஆண்டுகளும், பெண்கள் சுமார் 2 ஆண்டுகளும் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயம். இஸ்ரேலிய குடிமக்கள் அனைவருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

    இஸ்ரேலில் புதியதாக குடியேறியவர்களுக்கும், சில மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் மருத்துவ அடிப்படையில், இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், சில சிறப்பு விதிகளின் அடிப்படையில், விளையாட்டு வீரர்கள் மட்டும் குறுகிய காலத்திற்கு சேவை ஆற்றலாம்.

    தென் கொரியா

    தென்கொரியாவில் உடற்தகுதி நிறைந்த ஆண்கள் அனைவரும், இராணுவத்தில் 21 மாதங்களும், கடற்படையில் 23 மாதங்களும் மற்றும் விமானப்படையில் 24 மாதங்களும் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாகும். இது தவிர்த்து, தென் கொரியாவில் காவல்துறை, கடலோர காவல்படை, தீயணைப்பு சேவை மற்றும் சில சிறப்பு விதிகளில் அரசு துறைகளில் பணியாற்றக் கூடிய வாய்ப்பும் உண்டு.

    ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஏதேனும் ஒன்றில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு, இராணுவத்தில் கட்டாயப் பணியாற்ற விலக்கு அளிக்கப்படுகிறது. இப்போட்டிகளில் பதக்கம் வெல்லாத வீரர்கள், இராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.

    வட கொரியா

    வடகொரியா நாட்டில் ஆண்கள் 11 ஆண்டுகளும், பெண்கள் 7 ஆண்டுகளும் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாகும்.

    எரித்திரியா

    எரித்திரியா நாட்டில் ஆண்கள், இளைஞர்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் 18 மாதங்கள் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும். மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, எரித்திரியாவில் இந்த 18 மாத இராணுவ சேவை சில ஆண்டுகளும் நீட்டிக்கப்படுகிறது. இது போன்ற முடிவால் இளைஞர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இராணுவத்தில் கட்டாய சேவை ஆற்ற விரும்பாத பலர், பிரிட்டனில் தஞ்சம் அடைய கோரிக்கை வைப்பதுண்டு.

    சுவிட்சர்லாந்து

    சுவிட்சர்லாந்தில் 18 வயது முதல் 34 வயது வரையுள்ள ஆண்களுக்கு ராணுவ சேவை கட்டாயம். சுவிட்சர்லாந்தில் கட்டாய சேவையானது 21 வாரங்கள் வரை நீடிக்கும். அதனைத் தொடர்ந்து வருடந்தோறும் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். பெண்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் இராணுவத்தில் சேரலாம்.

    பிரேசில்

    பிரேசிலில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டாய ராணுவச் சேவை 10 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும். உடல் நலமின்மை போன்ற காரணங்களுக்காக, ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்றும் விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்.

    சிரியா

    சிரியாவில் அரசுப் பணிகளில் இருப்பவர்கள், கட்டாய இராணுவப் பணியைச் செய்யவில்லை என்றால், அவர்களின் வேலை பறிக்கப்படும். கட்டாய இராணுவ சேவையில் இருந்து தப்பித்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

    ஜார்ஜியா

    ஜார்ஜியாவில் ஒரு வருட இராணுவ சேவை கட்டாயமாகும். இதில், 3 மாதங்கள் போர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மீதமுள்ள 9 மாதங்கள் தொழில்முறை ராணுவத்திற்கு உதவும் அதிகாரியாக பணியாற்ற வேண்டும்.

    லிதுவேனியா

    லிதுவேனியாவில் 18 முதல் 26 வயதுக்குட்பட்ட ஆண்கள் கட்டாயமாக ஒரு வருடம் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இதில், பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஒற்றைத் தந்தையர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    துருக்கி

    20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் துருக்கியில் இராணுவ சேவை கட்டாயமாகும். அவர்கள் 6 – 15 மாதங்கள் வரை இராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.

    கிரீஸ்

    கிரீஸ் நாட்டில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு 9 மாதங்கள் இராணுவப் பணி கட்டாயம்.

    ஈரான்

    ஈரானில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 24 மாதங்கள் இராணுவத்தில் பணியாற்ற வேண்டியது அவசியம்.

    கியூபா

    கியூபாவில், 17 முதல் 28 வயதுடைய ஆண்கள் இரண்டு ஆண்டுகள் கட்டாய இராணுவ சேவையில் பணியாற்ற வேண்டும்.

     

    கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இந்திய யோகாசன ஆசிரியர்! தேள் மாதிரியே நிக்குறாப்ள..

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....