Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இந்திய யோகாசன ஆசிரியர்! தேள் மாதிரியே நிக்குறாப்ள..

    கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இந்திய யோகாசன ஆசிரியர்! தேள் மாதிரியே நிக்குறாப்ள..

    யாஷ் மன்சுக்பாய் மொராதியா என்னும் 21 வயதான இந்திய யோகாசன ஆசிரியர் ‘விருச்சிகாசனம்’ எனப்படும் தேள் போல நிற்கும் ஆசனத்தில் 29 நிமிடங்கள் மற்றும் நான்கு நொடிகள் வரை நின்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார்.

    இதற்கு முன்னதாக இந்த ஆசனத்தில் நான்கு நிமிடம் மற்றும் 47 நொடிகள் வரை நின்றதே கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது யாஷ் அந்த சாதனையினை முறியடித்துள்ளார்.

    நேற்று (ஜூன் 21) உலக யோகாசன தினத்தன்று கின்னஸ் அமைப்பானது இந்த தகவலினை வெளியிட்டது. யோகாசனத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    விருச்சிகாசனம் எனப்படும் தேள் போல வளைந்து நிற்கும் இந்த ஆசனமானது யோகாவில் மிகவும் கடினமான ஒன்றாகும். தீவிரமான பயிற்சிகளின்றி இந்த ஆசனத்தில் அமர்வது கடினமாகும். முன் கைகளை நிலத்தில் ஊன்றி, கால்களை தலைப் பகுதியினை நோக்கி அடைப்புக்குறி போல கால்களை வளைத்து நிற்பது விருச்சிகாசனம் எனப்படுகிறது.

    ‘இந்த கின்னஸ் சாதனையினை செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. இந்த சாதனையினைச் செய்ய ஐந்து வருடங்களுக்கு முன்பு முடிவுசெய்தேன். இரண்டு வருடங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டதன் பயனாய் இன்று இந்த சாதனையினைப் புரிந்துள்ளேன்.’ என்று யாஷ் கூறியுள்ளார்.

    மேலும், ‘இந்த விருச்சிகாசனமானது நிலைத்தன்மை பற்றியது. எவ்வளவு நேரம் இந்த ஆசனத்தினை செய்கின்றோமோ அந்த அளவிற்கு நமது மன ஆரோக்கியமானது வளர்ச்சியடையும்.’ என்றும் யாஷ் குறிப்பிட்டுள்ளார்.

    2001ல் பிறந்த யாஷ், தனது எட்டு வயதிலிருந்து யோகாசனத்தினைப் பயின்று வருகிறார். 2017ம் ஆண்டு தனது யோகாசனப் பயிற்சியினை முடித்த யாஷ், யோகா ஆசிரியராக தனது வாழ்கையினைத் துவங்கினார்.

    குறிப்பிட்ட இந்த யோகாசனத்தினை செய்ய யாஷுக்கு இரண்டு வருட பயிற்சி தேவைப்பட்டது. நீண்ட நேரம் கைகளின் மூலம் நிற்பதற்கு பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ள யாஷ், நடை பயிற்சி செய்யும் இயந்திரத்தில் கைகளின் மூலம் நடக்கவும் செய்துள்ளார்.

    ‘இந்த சாதனையானது உடலளவில் மட்டுமல்லாது சுய நம்பிக்கையினையும், மன வலிமையினையும் சார்ந்தது.’ என்று கூறிய யாஷ், பத்து நிமிடங்களுக்கு மேல் இந்த ஆசனத்தில் நின்ற பொழுது உடலளவில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசுத் துறைகளில் இவ்வளவு காலிப்பணியிடங்களா? அசர வைத்த புள்ளிவிவரம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....