Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசுத் துறைகளில் இவ்வளவு காலிப்பணியிடங்களா? அசர வைத்த புள்ளிவிவரம்!

    தமிழக அரசுத் துறைகளில் இவ்வளவு காலிப்பணியிடங்களா? அசர வைத்த புள்ளிவிவரம்!

    தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வேலையின்மை பிரச்னையை தீர்க்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆ.செல்வம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது: லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். 2019 ஆக., நிலவரப்படி அங்கு பதிவு செய்து காத்திருப்போரில் 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் 40 லட்சம் பேர். இந்தியாவில் அவ்வாறு காத்திருப்பவர்கள் 15 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது, என ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் 20 கோடி பேர் உள்ளனர்.

    தமிழக அரசின் துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. வேலை வாய்ப்பற்ற இளைய தலைமுறைகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் விதமாக காலிப்பணியிடங்களை அரசு நிரப்பிட வேண்டும். அரசுத்துறையில் ஒப்பந்தம், தினக்கூலி அவுட் சோர்சிங் முறைகளை தடுத்திட வேண்டும். முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    மேலும், தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து அரசுத் துறைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏராளமான அரசு ஊழியர்கள் இறந்துள்ளனர். அதனால் அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளது. அதாவது தமிழகத்தில் அரசுத்துறைகளில் 4.50 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது .

    தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உணவு மட்டும் போதாது, இவைகளையும் செய்ய வேண்டும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....