Monday, March 18, 2024
மேலும்
  Homeவாழ்வியல்மகளிர்தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உணவு மட்டும் போதாது, இவைகளையும் செய்ய வேண்டும்!

  தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உணவு மட்டும் போதாது, இவைகளையும் செய்ய வேண்டும்!

  தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க, உணவு மட்டும் போதாது சில குறிப்புகளையும் பின்பற்ற வேண்டும். பிறந்த குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கும் என்றாலும் மாதங்கள் செல்ல செல்ல தாய்ப்பால் பற்றாக்குறை ஆகும். இதை தடுக்க உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளிலும் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

  குழந்தை பால் உறிஞ்சு குடிக்கும் போதுதான் பால் சுரப்பு அதிகரிக்கிறது. குழந்தை மார்பு காம்புகளை உறிஞ்சும் போது அது மூளைக்கு தகவல் அனுப்புகிறது. அது ஆக்ஸிடாசினை உற்பத்தி செய்கிறது. ரத்த திசுக்கள் வழியே மூளைக்கு செய்தி சென்று மார்பகங்களை வந்தடைகிறது. இது ப்ரோலாக்டின் மூலம் பால் சுரப்பை தூண்டுகிறது.

  சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காது. இதற்கு எல்லாம் காரணம், ஊட்டச்சத்து குறைபாடு மட்டும் தான். இதனை நீங்கள் மிகவும் எளிமையான முறையில் சரி செய்ய முடியும். இதற்கு நீங்கள் வீட்டிலேயே, மிகவும் சத்துவாய்ந்த தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது…! இந்த பகுதியில் தாய்ப்பால் சுரப்பிற்கு உதவும் உணவு வகைகளை பற்றி காணலாம்.

  ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 2 கப் தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு ஒரு கப் அளவு சுண்டவிட்டு குடிக்கவும். தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். அல்லது, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை முளை கட்டியோ அல்லது பொடியாக அரைத்து தண்ணீரில் கலந்தோ சாப்பிடலாம். வெந்தயத்துக்குப் பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மை உண்டு.

  அம்மாக்கள்

  பாலூட்டும் அம்மாக்கள், தினமும் ஒன்று அல்லது இரண்டு கற்பூரவல்லி இலைகளைச் சாப்பிட்டு வந்தால், பிறந்த குழந்தைக்குச் சளிப் பிடிக்காது. எதிர்ப்புச்சக்தி அதிகமாகி நோய்த்தொற்றுகள் தவிர்க்கப்படும். பாலும் நன்கு சுரக்கும்.

  ஒரு பிஞ்சு முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கி, சாறு பிழிந்து கால் கப் சாப்பிடலாம். இதனால், மார்பகங்களில் ரத்த ஓட்டம் அதிகமாகி, பால் சுரப்பிகள் தூண்டப்படும்.

  ஒரு டீஸ்பூன் சோம்பை ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைத்துக் குடியுங்கள். இது, ஈஸ்ட்ரோஜன் செயல்பாடுகளை அதிகப்படுத்தி, நன்கு பாலூறச் செய்யும் மற்றும் ஒருநாளைக்குக் குழம்பில் போட்டோ அல்லது, நல்லெண்ணெய்யில் வதக்கியோ 5 பூண்டு பல் தவறாமல் சாப்பிடவும். பால் சுரப்பில் கண்கண்ட மருந்து இது.

  கம்பு, கேழ்வரகு இரண்டையும் முளை கட்டிச் சாப்பிடவும். இவற்றில் இருக்கும் அதிகப்படியான புரதம், பால் சுரப்பைத் தூண்டும். வீட்டிலேயே தயாரித்த பாதாம் பால், பசலை, முருங்கை மற்றும் வெந்தயக்கீரை ஆகியவை பால் சுரப்பை ஊக்குவிக்கும் உணவுகள். நிறையத் தண்ணீர் குடிப்பதும் பால் சுரப்புக்கு அவசியம்.

  இரும்புச்சத்து நிறைந்த அத்தி, பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுவதால் நல்ல பால்சுரப்பு உண்டாகும். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களை, பேரீச்சை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  காய்களை மசித்துச் செய்யப்பட்ட `சூப்’ வகைகள், நார்ச்சத்து நிறைந்த கீரைகள், வைட்டமின்கள் நிறைந்த கேரட், பீட்ரூட், இரும்புச்சத்துள்ள முருங்கைக்காய், நீர்ச்சத்து, கனிமச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

  பால்பெருக்கி மற்றும் பிரசவ அழுக்கு அகற்றிச் செய்கை சுறா மீனுக்கு இருப்பதால், குழம்பில் போட்ட சுறா மீன், சுறா மீன் புட்டு ஆகியவற்றைச் சிறிதளவு சாப்பிடலாம்.

  தாய்ப்பால் கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்:
  • தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் வாயு அதிகரிக்கும் உணவினைத் தவிர்க்கலாம்.
  • உருளைக்கிழங்கு , மாங்காய் மற்றும் வாழைக்காய்களைத் தவிருங்கள்.
  • சைவமுறை உணவு உண்பவர் என்றால் உங்களுக்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்து உள்ள
   உணவைச் சாப்பிடுகிறீர்களா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்
  • தைம், பெப்பெர்மிண்ட் மற்றும் பார்ஸ்லி, முட்டைகோஸ் போன்ற உணவுப்பொருள்களைத் தவிர்த்து விடுவது நல்லது.

  சில பெண்கள் தங்களது அழகு குறைந்து விடும் என்று நினைத்து தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு சிந்தனையாகும். இவ்வாறு செய்வதால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தாய்ப்பாலுக்கு நிகரான சத்தை எந்த ஒரு உணவும் கொடுத்துவிட முடியாது. தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் நலனுக்காக மட்டுமில்லை.

  தாய்ப்பால் கொடுப்பது தாயின் ஆரோக்கியத்திற்கும் நல்லது தான். ஆம், தாய்ப்பால் கொடுப்பதால் பெண்கள் மார்பக புற்றுநோயில் இருந்து விடுபட முடிகிறது. தாயின் உயிர்ச்சத்தான தாய்ப்பாலை, குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்குக் கொடுப்பது சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது.

  உருகும் எவரெஸ்ட் பனிப்பாறை; நேபாளம் எடுத்துள்ள முடிவு!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....