Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவெளிவந்த 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு; தேர்ச்சி பெற்ற தந்தை, தோல்வியடைந்த மகன்!...

    வெளிவந்த 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு; தேர்ச்சி பெற்ற தந்தை, தோல்வியடைந்த மகன்! – ஆச்சரியத்தில் மக்கள்!

    கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக, இந்தியா முழுவதுமே ஆன்லைன் வழியாகத் தான் பாடங்கள் நடத்தப்படடது. சில தேர்வுகள் நடக்காமலும், சில தேர்வுகள் ஆன்லைனிலும் நடைபெற்றது.

    இந்த ஆண்டு தான் தேர்வுகள் எப்போதும் போல நடைபெற்றது. பிறகு, தேர்வு முடிவுகளும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில், ஆச்சரியம் தரும் சம்பவம் நன்று மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில், தந்தையும், மகனும் ஒன்றாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். இதில் தந்தை தேர்ச்சி பெற, மகன் தோல்வி அடைந்துள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் புனேவில் வசித்து வருபவர், பாஸ்கர் வாக்மரே (வயது 43). இவரின் குடும்ப சூழல் காரணமாக, பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் 7 ஆம் வகுப்புக்குப் பின், வேலைக்கு சென்று விட்டார். இவருடைய மகனின் பெயர் சாகில். இந்நிலையில் பாஸ்கர் வாக்மரே, படிப்பைத் தொடர விரும்பியுள்ளார். 30 வருடங்களுக்குப் பின், தன்னுடைய மகனுடன் இணைந்து, 10 ஆம் வகுப்புத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

    தினந்தோறும் வேலைக்கு சென்று திரும்பிய பிறகு, 10 ஆம் வகுப்பு தேர்வுக்காக படித்துள்ளார் பாஸ்கர் வாக்மரே. இந்த ஆண்டு தந்தையும், மகனும் 10 ஆம் வகுப்புத் தேர்வை எழுதி முடித்தனர். தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் பாஸ்கர் வாக்மரே தேர்ச்சி அடைந்தார். ஆனால் அவரது மகன் சாக்கில், 2 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார்.

    தேர்ச்சி பெற்ற பிறகு, தனது மகனுடன் சேர்ந்து 10 ஆம் வகுப்புத் தேர்வுக்கு படித்தது தனக்கு உதவியாக இருந்தது என்று கூறினார் பாஸ்கர். தான் தேர்ச்சிப் பெற்றது மகிழ்ச்சியை அளித்தாலும், தன் மகன் தோல்வி அடைந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கூறினார் பாஸ்கர் வாக்மரே.

    பட்டம் படிப்பது வீண்: அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் பாஜக எம்எல்ஏ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....