Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பட்டம் படிப்பது வீண்: அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் பாஜக எம்எல்ஏ!

    பட்டம் படிப்பது வீண்: அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் பாஜக எம்எல்ஏ!

    இராணுவத்தில், “அக்னிபாத்” எனும் புதிய வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில், 4 வருடங்களுக்கு வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்களில் 4 ஆண்டுகள் பணியை வெற்றிகரமாக முடிப்பவர்களில், 25% பேர் மட்டும் நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில், இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பீகார் மாநில பாஜக எம்எல்ஏ இது குறித்து ஒரு சர்ச்சைக் கருத்தை வெளியிட்டார். இவரின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அக்னி பாத் திட்டத்தைப் பற்றி அறியாத மக்கள், பட்டம் பெற படித்து, பணத்தை வீணடிக்கிறார்கள் என பீகார் மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்குர் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தில், அக்னி வீரர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே தொடர் முடியும். அதற்கு பிறகு, பயிற்சி பெறுபவர்களில் 25% பேர் மட்டுமே நிரந்தரப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனால், நாடு முழுவதும் மத்திய அரசை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாக, பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையில், பாஜக எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்குர் பேசிய கருத்து, மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஹரிபூஷன் தாக்குர் பேசுகையில், தேசபக்திக்கு எதிரான மனநிலையை கொண்டவர்களால் மட்டுமே, அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பேச முடியும். பல நாடுகளில், இராணுவத்திற்கு சேவையாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயனே இல்லாத பட்டங்களை பெறுவதற்கு, மக்கள் பணத்தை செலவழிக்கிறார்கள். ஆனால், அக்னிபாத் திட்டத்தில் வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு, மற்ற துறைகளிலும், வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என பாஜக எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்குர் கருத்து தெரிவித்துள்ளார்.

    வெளிநாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த பணக்காரர்கள்; இந்தியாவிற்கு கவலையா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....