Monday, March 18, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புபன்னீர் சில்லி இப்படி செய்தா, தொட்டுக்க ரொம்ப நல்லாருக்கும்…

    பன்னீர் சில்லி இப்படி செய்தா, தொட்டுக்க ரொம்ப நல்லாருக்கும்…

    கார சாரமான பன்னீர் சில்லி நமது வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே மிக எளிமையாக செய்யலாம் வாருங்கள். 

    தேவையானப் பொருட்கள்: 

    1. பன்னீர்- 200 கிராம் 
    2. வெங்காயம்- 2 எண் 
    3. தக்காளி- 2 எண் 
    4. மைதா மாவு – 2 மேசைக்கரண்டி 
    5. சோள மாவு- இரண்டு மேசைக்கரண்டி 
    6. சிவப்பு மிளாகாய்த்தூள்- 1 தேக்கரண்டி 
    7. கரமசாலாத் தூள்- கால் தேக்கரண்டி 
    8. இஞ்சி- ஒரு துண்டு 
    9. பூண்டு- 4 பற்கள் 
    10. பச்சை மிளகாய்- 3 எண்  
    11. கடுகு- கால் தேக்கரண்டி 
    12. கருவேப்பில்லை- ஒரு இணுக்கு 
    13. மல்லித்தழை- இரண்டு கொத்து 
    14. உப்பு, தண்ணீர், எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை: 

    • பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை முறையே தனித்தனியாக சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • பிறகு, பன்னீர் தொய்த்து பொறித்து எடுக்க மசாலாவை தயார் செய்ய வேண்டும். அதற்கு முதலில், ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, சிவப்பு மிளகாய்த்தூள், சிறுது உப்பு  ஆகியவற்றை சேர்த்து உடன் சிறிது தண்ணீரையும் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். இந்த மாவு கட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ இருக்க கூடாது. 
    • அடுத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து பன்னீர் துண்டுகளை மசாலா மாவில் தொய்த்து, மொறு மொறுப்பாக பொறித்து எடுக்க வேண்டும். 
    • பின்பு, மீண்டும் ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் கால் தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிந்ததும், பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கியவுடன் அதில், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டினை சேர்க்க வேண்டும். 
    • பிறகு, தக்காளி துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பும் கரமசாலாவும் சேர்த்து வதக்க வேண்டும். இரண்டு இணுக்கு உருவிய கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். 
    • இவையனைத்தும் நன்றாக வதங்கியவுடன், நாம் முன்னரே பொறித்து எடுத்த பன்னீர் துண்டுகளைச் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். மசாலாவும் பன்னீர் துண்டுகளும் ஒன்றோடு ஒன்று நன்றாக சேர மல்லித்தழையை தூவி  இறக்கிட வேண்டும். அவ்வளவுதான் காரசாரமான சில்லி பன்னீர் தயார்!
    • (நீங்கள் விரும்பினால், சிறிது மிளகுத்தூள், இரண்டு மூன்று சொட்டு எலுமிச்சை சாரும் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல், வீட்டில் குடைமிளகாய் இருந்தாலும் அதையும் சேர்த்துச் செய்யலாம்)

    சத்து: பன்னீரில் புரதச் சத்தும் கொழுப்பு சத்தும் அதிகளவில் காணபடுகின்றன. அதுமட்டுமின்றி, சில வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்களும் காணப்படுகின்றன. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு இவ்வாறு, சத்தாக வீட்டிலேயே செய்துக் கொடுக்கலாம். 

    கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இந்திய யோகாசன ஆசிரியர்! தேள் மாதிரியே நிக்குறாப்ள..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....