Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலி!

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலி!

    தமிழ்நாட்டில் பரவலாகப் பல இடங்களில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பல ஆலைகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் ஆலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்படுவதில்லை. இதனால் இதுபோன்ற ஆலைகளில் வெடி விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.

    அதுபோன்ற ஒரு விபத்து தான் இப்போது கடலூர் எம்.புதூர் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியில் சிறிய அளவிலான நாட்டு வெடி மற்றும் வானவெடி தயார் செய்யும் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது.

    கோப்பர்குவாரி மலை பகுதியில் உள்ள எம்.புதூர் கிராமத்தில் வனிதா மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு இன்று மதியம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பணியாளர்கள் சித்ரா, அம்பிகா, சத்தியராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். அத்துடன் ராஜி, வசந்தா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    இதையடுத்து படுகாயம் அடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்கள் சடலங்களும் மீட்கப்பட்டன. இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இதனிடையே வெடி விபத்தில் உயிரிழந்தோருக்குத் தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இதில் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெரியகரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா, நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா மற்றும் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதே விபத்தில் காயமடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா என்பவருக்கு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    ஆச்சர்யமூட்டும் உலகின் அதிசய இடங்கள்: தெரிந்து கொள்ளுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....