Saturday, May 4, 2024
மேலும்
    Homeஜோதிடம்இன்றைய ராசிபலன்கள் -மேஷம் முதல் மீனம் வரை

    இன்றைய ராசிபலன்கள் -மேஷம் முதல் மீனம் வரை

    மேஷம்: நீங்கள் புத்துணர்ச்சியுடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.நீங்கள் உற்சாகத்துடன் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்களின் பணத் தேவைகள் பூர்த்தியாகலாம். உங்கள் சேமிப்பு உயர்வதைக் காண்பீர்கள்.உங்கள் துணை விரும்பும் வகையில் நடந்து கொள்வீர்கள்.ஒருவருக்கொருவர் அனுசரனையாக நடந்து கொண்டால் உறவின் பிணைப்பு வலுப்படும். உங்கள் ஆரோக்கியத்திற்காக சிறிது பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.தொண்டை வலி ஏற்படாமல் இருக்க குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்திடுங்கள். உங்கள் கண்களுக்கும் சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

    ரிஷபம்: உங்கள் கனவுகளும் விருப்பங்களும் நிறைவேறும். தொலை தூரத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.உங்கள் பணிக்கு உரிய பாராட்டு கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடிப்பீர்கள்.நிதிநிலைமை முன்னேற்றகரமாக இருக்கும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். இதனால் மகிழ்ச்சி ஏற்படும்.உங்கள் துணையுடன் குடும்பப் பிரச்சினை ஒன்றை சந்திக்க நேரலாம். குடும்பத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்பட ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசிக் கொள்ள வேண்டும்.கால் மற்றும் தொடைகளில் வலி ஏற்படலாம். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியத்தை பேண உதவும்.

    மிதுனம்: உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் உறுதியும் தேவை. வேகத்தை தவிர்க்க வேண்டும். சிறப்பாக திட்டமிட்டால் நல்ல பலன்களைப் பெறலாம்.அமைதியாகவும் எதிலும் தலையிடாமல் இருப்பதன் மூலம் உணர்ச்சிவசப்படாமல் இருக்க உதவும். பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரும். என்றாலும் உங்கள் திறமை மூலம் சமாளிக்கலாம். உங்களை நீங்கள் உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். நிதி நிலையை கண்காணிப்பதன் மூலம் ஸ்திர நிலையைக் காணலாம்.உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி நிலவும்.இன்று நீங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். தேவையின்றி பதட்டப்பட வேண்டாம். அது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

    கடகம்: நீங்கள் செய்யும் எந்தச் செயலிலும் நம்பிக்கையும் உறுதியும் தேவை.உங்கள் மனதில் எதிர்மறை எண்ணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.பணிகளை ஒழுங்குபடுத்தி முன்னுரிமைப்படி செய்தால் குறித்த நேரத்தில் முடிக்க இயலும். இதனால் பணியில் மனநிறைவைப் பெறலாம்.உங்கள் லட்சியம் சேமிப்பாக இருக்க வேண்டும். முடிந்த அளவில் சேமிக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நேர்மறை அணுகுமுறை தேவை.உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் இடைவெளி அனுமதிக்காதீர்கள்.உங்கள் துணையுடன் நட்போடு நடந்துகொள்ளுங்கள்.இனிப்பு உணவு வகைகள் காரணமாக பல் வலி ஏற்படலாம். அதனை தவிர்ப்பது நல்லது.

    சிம்மம்: உங்கள் பொறுமை காரணமாக வெற்றி அடைவீர்கள். பொறுமை மற்றும் புத்திசாலித்தனம் பொறுத்து உங்கள் வளர்ச்சி அமையும். உங்கள் செயல்களில் கவனம் தேவை.உறுதியும் தைரியமும் இருந்தால் வெற்றி பெறலாம். சாதாரண பணிகளை விட வார துவக்கத்தில் பணிகள் கூடுதலாக இருக்கும்.பணபுழக்கம் சிறப்பாக இருக்காது. என்றாலும் அதனை பெரிதாகக் கொள்ள வேண்டாம். நிதிநிலையை மேம்படுத்த முயலுங்கள்.உங்கள் துணையுடன் உறவு நல்லுறவாக அமைய அவருடைய கருத்துக்கும் மதிப்பு அளியுங்கள்.தோல் அரிப்புகளை தடுக்க எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும். அதிகமாக வெயிலில் சுற்றாதீர்கள்..

    கன்னி: வார துவக்கத்தில் மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். பயனுள்ள செயல்களுக்கு அதனை பயன்படுத்துங்கள். பணியிடத்தில் பணிகளை மேற்கொள்ளும்போது கடினமான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பதிலும் சிக்கல்கள் காணப்படும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். தேவையற்ற செலவுகள் உங்களுக்கு கவலையை அளிக்கும். குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு  உங்கள் துணையுடன் சூடான விவாதத்தில் கலந்து கொள்ள நேரிடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

    துலாம்:உங்கள் தைரியம் மற்றும் உறுதி காரணமாய் வெற்றி கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்களை நம்பிக்கையுடன் செய்யுங்கள். அமைதியாய் இருக்க இசை கேளுங்கள்.உங்கள் தைரியம் மற்றும் உறுதி காரணமாய் வெற்றி கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்களை நம்பிக்கையுடன் செய்யுங்கள். நிதிநிலைமை சுமாராக இருக்கும். சேமிப்பு மற்றும் சிக்கனமான செலவை மேற்கொள்ள வேண்டும். இருப்பதைக் கொண்டு வாழ்தல் அவசியம்.உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். உங்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவால் உங்கள் துணை மகிழ்ச்சியடைவார்.உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.

    விருச்சிகம்: நீங்கள் உற்சாகமாக ஆற்றலுடன் செயல் பட வேண்டும். பொறுமையாக செயல்களைக் கையாள வேண்டும். உங்கள் கூடப் பிறந்தவர்களுடன் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம்.நீங்கள் மகிழ்ச்சியோடு பணியாற்றுவீர்கள். உங்கள் முயற்சிக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.நிதி வளர்ச்சிக்கான சாத்தியம் உள்ளது. என்றாலும் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.உங்களின் உறவுமுறை சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் இன்றைய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள்.பொதுவாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும்.

    தனுசு: வாரத்தின் ஆரம்பத்தில் சில தடைகள் காணப்படும். உங்களின் தைரியத்தைக் கொண்டு சமாளிப்பீர்கள். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.பணியைப் பொறுத்த வரை அதிக சவால்களை நீங்கள் சந்திக்க நேரலாம். அதிகப் பணிகள் காரணமாக நீங்கள் சிறப்பாக திட்டமிடுவதன் மூலம் வெற்றி காணலாம்.நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.உங்கள உடன் பிறந்தோர் மற்றும் நெருங்கிய உறவுகளுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உறவில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். மிதமான ஆரோக்கியம் காணப்படும். அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

    மகரம்: நீண்ட கால திட்டங்ககளை அமைப்பது அவசியம்.வார துவக்கத்தின் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும்.உங்கள் பணியில் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும். உங்கள் பணியில் உற்சாகத்தைக் காண்பீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.பணபுழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பும் கணிசமாக உயரும்.உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை வளர்க்க முடியும். இதனால் உறவை வலுப்படுத்த முடியும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும்.

    கும்பம்: உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நீண்ட கால திட்டம் சிறந்தது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.பணியிடச் சூழல் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும். பணியிடத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும்.உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் கையில் உள்ள பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.நீங்கள் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் காணப்படுவீர்கள். இதனை உங்கள் துணைக்கு மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் இருவரிடையே அன்பு அதிகரிக்கும்.உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். உங்கள் தன்னம்பிக்கை காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    மீனம்: கவனமாகவும் சாமார்த்தியமாகவும் செயல்களை செய்ய வேண்டும். சிறு கவனச் சிதறல் காரணமாகக் கூட தவறுகள் நேரலாம்.உங்கள் பணிகள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெரும் அளவிற்கு இருக்காது. மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்தால் விரைவில் பாராட்டைப் பெற இயலும்.சில கடன்களை அடைக்க வேண்டியிருக்கும். அதனை உடனே செய்வதன் மூலம் பண இழப்பை தடுக்க முடியும். பணத்தை சிறப்பாக நிர்வகிக்க வேண்டியது அவசியம்.உங்கள் பிரியமானவரிடத்தில் அன்பாக இருக்க வேண்டும். இதனால் நல்லுறவை வளர்க்க இயலும்.குளிர்ச்சியான உணவு வகைகள் காரணமாக ஒவ்வாமை ஏற்படும் என்பதால் உணவு மற்றும் நீரில் கவனம் தேவை.

    பாரம்பரிய உணவான கேழ்வரகு சந்திக் களியை, இப்படி சுலபமா செய்யலாம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....