Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்இந்தியாஆன்லைனில் கடன் மோசடி: மன அழுத்தத்திலும், அச்சத்திலும் வாழும் இந்தியர்கள்!

  ஆன்லைனில் கடன் மோசடி: மன அழுத்தத்திலும், அச்சத்திலும் வாழும் இந்தியர்கள்!

  ஆன்லைன் செயலியில் கடன் வழங்கும் நிறுவனங்கள், இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த செயலிகள் மிகவும் ஆபத்தானவை என்றும், மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஆனால், பொதுமக்களில் சிலர் அவசரத் தேவைக்காக, ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி விட்டு, பிறகு வாழ்க்கையையே தொலைக்கின்றனர்.

  அப்படி தன் வாழ்க்கையைத் தொலைத்து நிம்மதியின்றி தவிரப்பவர் தான் புனேவைச் சேர்ந்த ராஜ். கடந்த மார்ச் மாதம் உடனடித் தேவைக்காக, ஆன்லைன் செயலியில் ரூ. 10,000 கடன் வாங்கினார் ராஜ். ஆனால், இதில் பாதி தொகை தான் கடனாக வழங்கப்பட்டது. கடன் வழங்கிய அடுத்த 3 நாட்களுக்குள், கடன் பெற்றத் தொகையை விட மூன்று மடங்கு பணம் கேட்டு ராஜை மிரட்டினர்.

  இதனால், மிகுந்த மன வேதனை அடைந்த ராஜ், இந்தக் கடனைத் தீர்க்க இன்னொரு ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியுள்ளார். இப்படியே 33 ஆன்லைன் செயலிகளில் கடன் வாங்க, தற்போது 35,000 ரூபாய்க்கும் மேல் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை உள்ளது.

  நாளுக்கு நாள், இவர்களின் மிரட்டல் அதிகரிக்க காவல் துறையில் புகார் அளிக்கவும் பயந்துள்ளார் ராஜ். செயலிகளை இயக்கும் நபர்கள், அவரது தொலைபேசியில் இருந்த அனைத்து தொடர்புகள் மற்றும் அவரது புகைப்படங்களை அணுகுவதற்கான அனுமதியைப் பெற்றனர். அவரது தொலைபேசியில் உள்ள அனைவரது தொலைபேசி எண்ணிற்கும், அவரது மனைவியின் நிர்வாணப் படங்களை அனுப்புவதாக அச்சுறுத்தியுள்ளனர். கடனைச் செலுத்துவதற்காக, ராஜ், தனது மனைவியின் நகைகள் அனைத்தையும் விற்று விட்டார். ஆனால் அவர் இன்னும் அச்சமாகத் தான் இருக்கிறார்.

  இந்தியாவில், இந்த மாதிரியான மொபைல் போன் மோசடி மிகவும் பொதுவானதாகி விட்டது. ஜனவரி 1, 2020 முதல் மார்ச் 31, 2021 வரை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நடத்திய ஆய்வில், ஏறக்குறைய 600 சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகள் கண்டறியப்பட்டுள்ளன.

  கடன் வழங்கும் செயலியை இயக்குபவர்களுக்கு, ஏமாறக்கூடிய மற்றும் பணம் தேவைப்படக்கூடிய நபர்களைக் கண்டறிவதற்கான பயிற்சி அளிக்கப்படுவது, அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேட்பதில் பாதி மட்டுமே கடனாக வழங்கப்பட்டு, பிறகு மூன்று மடங்கு தொகையைத் திருப்பித் தருமாறு கேட்பார்கள். பாதிக்கப்படும் நபர் பணம் செலுத்தத் தவறினால், அதிக அழுத்தம் விரைவாகப் பயன்படுத்தப்படுகிறது.

  சந்தீப் கோர்கோன்கர் என்பவர் கடன் மோசடி செய்பவர்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மே 4 ஆம் தேதியன்று, தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அதிலும் அவர் கடன் வாங்கக் கூட இல்லையாம். செயலியை பதிவிறக்கம் மட்டுமே செய்தார் என்று அவரது சகோதரர் தத்தாத்ரேயா கூறினார்.

  இனி, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஆன்லைன் செயலிகளை நம்பி கடன் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  ஆன்லைன் சூதாட்டத்தை தடைச் செய்ய அவசர சட்டம் தேவை: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....