Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆன்லைன் சூதாட்டத்தை தடைச் செய்ய அவசர சட்டம் தேவை: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

    ஆன்லைன் சூதாட்டத்தை தடைச் செய்ய அவசர சட்டம் தேவை: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

    இன்றைய இளம் தலைமுறையினர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி பணத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், விலைமதிப்பற்ற தங்களின் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். இளைஞர்கள் தவறான முடிவை எடுப்பதற்கு முன்பாக ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அவசர தடைச் சட்டம் விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் மைதானத்திற்கு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாமக நிர்வாகிகள் மற்றும் பாமக தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், “ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டால் தமிழகத்தில் இதுவரை 23 உயிர்களை நாம் இழந்துள்ளோம். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால், பணம் மற்றும் நகை உள்ளிட்ட உடமைகளை இழந்து வேதனையில் வாடுகின்றனர்.
    இதனால், சமூகத்தில் ஏற்படும் அவமானம் காரணமாக, தான் மட்டுமில்லாமல் தனது குடும்பத்திற்கே விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நிகழ்வுகள் அரங்கேறி வருவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதனை நாம் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், விளைவுகள் மேலும் விபரீதமாகும். கடந்த ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்தின் மூலமாக 10,500 கோடி ரூபாய் வருமானத்தை அந்நிறுவனம் சம்பாதித்துள்ளது. இந்த வருமானத்தில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியாக 3,000 கோடி கிடைத்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

    மேலும் அவர் பேசுகையில், நடப்பாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 15,000 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இன்னும் 2 ஆண்டுகளில், 40,000 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் சொல்கிறார்கள். இந்த 40,000 கோடி யாருடைய பணம்? சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுடைய பணம். நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு, 2 வாரம் வரை காத்திருக்காமல் 2 நாட்களிலேயே அறிக்கையை சமர்ப்பித்து அவசர தடைச் சட்டம் கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சி, ஓட்டு அரசியலுக்காக இதை செய்யவில்லை. மக்களின் நலனுக்காகத் தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்துகிறோம். மக்களின் அனைத்து விதமானப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் பாமகவின் அடுத்தடுத்த போராட்டங்கள் அமையும். அரசு, ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய குழு அமைத்து இருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார் அன்புமணி ராமதாஸ்.

    காவேரி விவகாரத்தில் அணை கட்டுவதை தடுக்கும் விதமாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக ஆளும் மாநிலமான கர்நாடக முதல்வருடன் பேசி சுமூக உடன்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம். மேகதாது விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு எனக்கும் யாரும் சிண்டு முடிக்க வேண்டாம் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    உக்ரைனில் பாஸ்போர்ட் வழங்கும் ரஷ்யா! கண்டனம் தெரிவிக்கும் உக்ரைன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....