Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் 21 டன் எடை கொண்ட பக்தர்களின் தலைமுடி, 47 கோடி ரூபாய்க்கு...

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 21 டன் எடை கொண்ட பக்தர்களின் தலைமுடி, 47 கோடி ரூபாய்க்கு ஏலம்!

    திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 21 டன் எடை கொண்ட தலைமுடி இணையத்தின் மூலம் ஏலம் விடப்பட்டது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பல வகையான காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் முடியை காணிக்கையாக செலுத்துவதை பக்தர்கள் பலரும் பின்பற்றி வருகின்றனர். 

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முதல் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை தரம் வாரியாக பிரித்து சேகரித்து வைக்கப்படும். பிறகு ஒரு குறிப்பிட்ட அளவில் முடி சேர்ந்ததும் ஏலம் விடப்படும். 

    அந்த வகையில் நேற்று 21 டன் எடை தலைமுடியை கோயில் நிர்வாகம்  இணையதளத்தின் வாயிலாக ஏலம் விட்டது. இதை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 47 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தாக தேவஸ்தான பொது மேலாளர் கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார். 

    இதனிடையே நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 66,072 பேர் தரிசனம் மேற்கொண்டனர். அதில் 25,239 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். மேலும் உண்டியலில் 4.23 கோடி ரூபாய் வசூலானது. 

    ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக டிச.5 முதல் சென்னை-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....