Saturday, March 16, 2024
மேலும்
    Homeஆன்மிகம்கார்த்திகை பிரம்மோற்சவம்: மோகினி அலங்காரத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்த பத்மாவதி தாயார்...

    கார்த்திகை பிரம்மோற்சவம்: மோகினி அலங்காரத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்த பத்மாவதி தாயார்…

    கார்த்திகை பிரம்மோற்சவ 5 ஆம் நாளான நேற்று திருச்சானூர் பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

    ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உள்ளது. இந்தக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 

    இந்நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை பிரம்மோற்சவ திருவிழா கடந்த நவம்பர் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 5 ஆம் நாளான நேற்று காலையில் பத்மாவதி தயார் மோகினி அலங்காரத்தில் தோன்றினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பத்தர்கள் கலந்துகொண்டு தாயாரை தரிசித்தனர். 

    முன்னதாக நேற்று திருமலையில் இருந்து ஏழுமலையான் அணியும் தங்க காசிக்கு மாலை யானை மீது திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் கோயில் அருகே காசு மாலையை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியான தர்மா ரெட்டி, தனது தலை மீது சுமந்து எடுத்து வந்து திருச்சானூர் அர்ச்சகர்கள் மற்றும் அங்குள்ள அதிகாரிகளிடமும் ஒப்படைத்தார். இதையடுத்து, இரவு பத்மாவதி தாயாருக்கு காசு மாலை அணிவிக்கப்பட்டு கஜ வாகன சேவை நடைபெற்றது. 

    அண்ணாமலையார் கோயிலில் அன்னதானம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....