Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபோராடி வெற்றி பெற்ற போர்ச்சுகல்; ரொனால்டோ அரங்கேற்றிய சாதனை

    போராடி வெற்றி பெற்ற போர்ச்சுகல்; ரொனால்டோ அரங்கேற்றிய சாதனை

    போர்ச்சுகல் அணிக்காக புதிய கோலை அடித்தபோது ரொனால்டோ புதிய சாதனை படைத்தார்.

    கத்தாரில் தற்போது நடப்பாண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவற்றுள் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

    இந்நிலையில், நேற்று ரொனால்டோ இடம்பெற்ற போர்ச்சுகல் நாடும், ஆப்பிரிக்க நாடான கானாவும் நேற்று ஆடின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதற்கு நேர்மாறாக இருந்தது இரண்டாம் பாதி. 

    முதலில், போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ கோல் போட முயன்றபோது, கானா வீரர் சாலிஸூ அவரை ஃபௌல் செய்தார். இதைத்தொடர்ந்து, நடுவர் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் போர்ச்சுகல் அணி முன்னிலைப் பெற்றது.

    இதைத்தொடர்ந்து, கானா அணியின் வீரர் ஆன்ட்ரெ அயிவ் கோலை அடித்து ஆட்டத்தை சமனாக்கினார். ஆனால், போர்ச்சுகல் வீரர் ஜோ பெலிக்ஸ் ஒரு கோல் மற்றும் ரஃபேல் லியோ தலா ஒரு கோல் அடிக்க போர்ச்சுகல் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதன்பிறகு, கானா வீரர் உஸ்மான் கோல் அடித்தார். இன்னும் ஒரு கோல் அடித்தால் சமன் என்ற நிலையில், கானா அணியினர் எவ்வளவு போராடியும் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. 

    இறுதியில், போர்ச்சுகல் அணி 3-2 என்ற கணக்கில் கானா அணியை வீழ்த்தியது. ரொனால்டோ பெனால்டி மூலம் கோலடித்ததில் 5 வெவ்வேறு உலகக் கோப்பை போட்டிகளில் கோலடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.

    நேற்று நடைபெற்ற மற்ற ஆட்டங்களில், சுவிட்சர்லாந்து 1-0 என்ற கணக்கில் கேமரூன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும், உருகுவே மற்றும் சுதந்திர கொரியாவுக்கு நடைபெற்ற ஆட்டமானது சமனில் முடிவடைந்தது. 

    6 ஆயிரம் பேரை நீக்கப்போகும் எச்பி; வெளிவந்த திடுக்கிடும் தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....