Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'அங்குதான் ஆட்டம் வேறுதிசைக்குச் சென்றது' - தோல்வி குறித்து மனம் திறந்த தவான்...

    ‘அங்குதான் ஆட்டம் வேறுதிசைக்குச் சென்றது’ – தோல்வி குறித்து மனம் திறந்த தவான்…

    நியூசிலாந்திற்கு எதிரான இந்திய அணியின் தோல்வி குறித்து ஷிகர் தவான் மனம் திறந்துள்ளார். 

    இந்திய அணி தற்போது நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இவற்றுள் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. 

    இதைத்தொடர்ந்து, இன்று நியூசிலாந்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தது. இந்திய அணித்தரப்பில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களும், தவான் 72  ரன்களும் எடுத்தார். 

    307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47.1 ஆவது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்து, இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தியது. 

    நியூசிலாந்து அணித்தரப்பில் டாம் லாதம் 145 ரன்களும், கேன் வில்லியம்சன் 94 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். 

    அவர் கூறியதாவது: 

    நாங்கள் நிறைய ஷார்ட் பந்துகளை வீசினோம். அதை நன்குப் பயன்படுத்தி டாம் லதம் ரன்களை சேர்த்தார். சரியாக ஃபீல்டிங் செய்யவில்லை. ஷார்ட் பந்துகளை வீசியதால் ஆட்டம் எங்கள் கையை விட்டுப் போய்விட்டது. 40-வது ஓவரில் லதம் 4 பவுண்டரிகளை அடித்தார். அங்கு தான் ஆட்டம் வேறு திசைக்குச் சென்றது. இந்த ஆட்டத்திலிருந்து எங்கள் அணி வீரர்கள் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டிருப்பார்கள். 

    இவ்வாறு கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

    போராடிய இந்திய பந்துவீச்சாளர்கள்; அபாரம் காட்டிய நியூசிலாந்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....