Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபோராடிய இந்திய பந்துவீச்சாளர்கள்; அபாரம் காட்டிய நியூசிலாந்து

    போராடிய இந்திய பந்துவீச்சாளர்கள்; அபாரம் காட்டிய நியூசிலாந்து

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

    இந்திய அணி தற்போது நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. 

    இவற்றுள் இருபது ஓவர் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில், இன்று முதலாவது ஒருநாள் போட்டி நடைபற்று வருகிறது. ஆக்லாந்தில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஷிகர் தவான் தலைமையிலான் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

    இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக, கேப்டன் ஷிகர் தவனும் சுப்மன் கில்லும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். இருவருமே தங்களது அரைசதங்களை பூர்த்தி செய்தனர். சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுக்க, தவானுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். ஆனால், தவான் 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். 

    இதைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் பெரிதும் சோபிக்காத நிலையில், அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 36 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து ஆடிய ஷ்ரேயாஸ் 80 ரன்கள் எடுத்த நிலையில் பெர்குசன் பந்தில் சரிந்தார். 

    இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

    இதைத்தொடர்ந்து, 307 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, பின் ஆலன் மற்றும் கான்வே களமிறங்கினர். இருவரும் முறையே 22, 24 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதற்கிடையில் வில்லியம்சன் களமிறங்கினார். இதற்கடுத்து, களமிறங்கிய மிட்செல் 11 ரன்களுக்கு வெளியேற, நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், டாம் லாதமுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சுகளை சிதறடித்தது. 

    இந்திய பந்துவீச்சாளர்கள் எவ்வளவு போராடியும், இந்த ஜோடியை பிரிக்க இயலவில்லை. இதன் விளைவு நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபாராமாக விளையாடிய டாம் லாதம் 145 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். மற்றொரு வீரரும் நியூசிலாந்து அணியின் கேப்டனுமான வில்லியம்சன் 94 ரன்கள் எடுத்து அசத்தினார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....