Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் வாரிசு படத்திற்காக சிம்பு செய்த செயல்...வெளிவந்த தகவல்

    விஜய்யின் வாரிசு படத்திற்காக சிம்பு செய்த செயல்…வெளிவந்த தகவல்

    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், வாரிசு. ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷ்யாம் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, பிரபல இயக்குநர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். 

    வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திரைப்பட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமன் இசையில் உருவாகிவரும், வாரிசு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளிவந்து யூடியூப் தளத்திலும், ரீல்ஸ்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. 

    இதைத்தொடர்ந்து, வாரிசு திரைப்படத்தின் அடுத்தப் பாடல் குறித்த கேள்விகள் இணையத்தில் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும், பிரபல நடிகர் சிம்பு, அப்பாடலை பாடியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 

    நடிகர் சிம்பு இசையமைப்பாளர் தமனுக்கும், நடிகர் விஜய்க்கும் நெருக்கமானவர் என்பதால் இந்த தகவல் உண்மையாக இருக்க அநேக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்தகவலால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் சிம்பு தன் திரைப்படங்களில் மட்டுமல்லாது, பிறர் திரைப்படங்களில் தொடர்ந்து பாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

    மீண்டும் ரிலீஸாகும் ‘லவ்-டுடே’…கல்லாக்கட்டுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....