Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்கல்லூரி மாணவிகளுக்கான வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு முகாம்; Voter Helpline என்கிற செயலி மூலம் வாக்காளர்...

    கல்லூரி மாணவிகளுக்கான வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு முகாம்; Voter Helpline என்கிற செயலி மூலம் வாக்காளர் பதிவு…

    புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய வாக்காளர்களுக்கான Voter Helpline என்கிற செயலி மூலம் வாக்காளர் பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி காந்திவீதியில் உள்ள பாரதிதாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று கல்லூரி மாணவிகளுக்கான வாக்காளர் சேர்ப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதவி வாக்காளர் அதிகாரி, வட்டாச்சியர் மற்றும் கல்லூரி முதல்வர் கலந்துகொண்டு புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை Voter Helpline என்கிற செயலி மூலம் தங்களை பதிவு செய்துவைது குறித்து செயல்விளக்கம் மற்றும் பதிவு செய்தனர்.

    Voter Helpline என்கிற செயலி மூலம் இன்று கல்லூரி மாணவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதற்கான பூர்த்தி செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் ஒவ்வொருவரின் வாக்குரிமை, ஒவ்வொரு வாக்கின் மதிப்பு, தற்போது இளம் வாக்காளர்களே தேசத்தின் வலிமையான தலைவர்களை தேர்ந்தெடுக்க வலிமை உள்ளவர் என்பது குறித்து விளக்கமளித்தனர்.

    தொடர்ந்து மாணவிகள் பலரும் தங்களது வாக்காளர் விபரங்களை செயலி மூலம் பதிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை- அரசு விளக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....