Monday, March 18, 2024
மேலும்
  Homeவாழ்வியல்ஆரோக்கியம்தைராய்டு நோய் சிறப்பு பார்வை: உயிரிழப்பைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

  தைராய்டு நோய் சிறப்பு பார்வை: உயிரிழப்பைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

  உலகம் மிக வேகமாக நகர்கிறது. அதிவேக உலகில், உணவு முறையும் மாறியுள்ளது. இதன் விளைவு தான், பல்வேறு நோய்கள் மனிதர்களில் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. அதில் ஒன்று தான் தைராய்டு.

  இந்நோய் உள்ளவர்களுக்கு இருக்கும் முக்கியப் பிரச்னை என்னவென்றால், அதனால் பாதிக்கப்பட்டவர்ள் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதையே அறியாமல் இருப்பது தான். இந்நோய் அதிகமாக பெண்களுக்கு தான் ஏற்படுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு, மகப்பேறுக்கு பிறகு முதல் 3 மாத காலத்தில் 44.3% பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு ஏற்படுகிறது.

  தைராய்டு நோய் என்பது மனிதர்களுடைய கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை வெளியிடுவது தைராய்டு சுரப்பி தான். உடல் தனக்கு கிடைக்கும் ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கும், கதகதப்புடன் வைத்துக் கொள்வதற்கும் இது உதவுகிறது.

  ஒரு வகையில் மனித உடலுக்கு ஒரு பேட்டரி போன்ற அமைப்பு தான் தைராய்டு சுரப்பி. ஒருவேளை இந்த சுரப்பி, ஹார்மோன்களை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சுரந்தால் தைராய்டு நோய்க்கான பிரச்னை உண்டாகிறது என்கிறார், ஆந்திர பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற உள்சுரப்பியியல் நிபுணர் (Endocrinologist) மருத்துவர் பெல்லம் பரணி.

  மனித உடலுக்குத் தேவையான அளவு ஹார்மோன், தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படவில்லை என்றால், அது ஹைப்போ-தைராய்டிசம் எனப்படும். இதனால் பாதிக்கப்பட்டால் விரைவில் அயர்ச்சி அடைந்துவிடுவது உறுதி. ஒருவேளை தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்து விட்டால், அது ஹைப்பர்-தைராய்டிசம் எனப்படும். இவர்களுக்கு அதிக பசி மற்றும் அதிக வியர்வை உண்டாகும். 3வது பாதிப்பு தைராய்டு சுரப்பி வீக்கமடைவது. கழுத்துக் கழலை எனும் இந்த குறைபாடு ‘Goiter’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. மருந்துகளால் தீர்க்க முடியா விட்டால், இப்பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை அவசியம் தேவை.

  அறிகுறிகள்:
  ஹைப்போ-தைராய்டிசம்:
  • உடல் எடை கூடுவது
  • முகம் மற்றும் கால்களில் வீக்கம்
  • சோர்வாகவும் சுறுசுறுப்பில்லாத உணர்வு
  • பசி எடுக்காமல் போவது
  • அதிக தூக்க உணர்வு
  • அதிகமாக குளிர்வது போன்ற உணர்வு
  • பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் உண்டாகும்
  • முடி உதிரும் பிரச்னை
  ஹைப்பர்-தைராய்டிசம்:
  • போதுமான அளவு பசியிருந்தும் நல்ல உணவுகளை உட்கொண்டாலும் உடல் எடை குறைதல்
  • கை – கால் நடுக்கம்
  • திடீர் திடீரென மனநிலை மாறுவது
  • கொஞ்சம் வெயில் அடித்தாலும் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது
   தூக்கத்தின் போது மூச்சு சீரற்று இருக்கும்
  • இதயத்துடிப்பு சீரற்று இருக்கும்
  • கண் பார்வை மங்கிப் போவது
  • மூளை மூட்டம்

  தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் போனால் அதைக் கண்டுபிடிக்க, அதற்கென குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் தனியாக இல்லை. பொதுவாக 80 முதல் 90% தைராய்டு நோயாளிகள் சிகிச்சைக்குப் பின்பு குணமடைந்து விடுவார்கள். ஆனால், சிலருக்கு இது முற்றிலும் குணமாவதில்லை.

  ஹைபோ தைராய்டிசம் என்றால் T3 (ட்ரை-அயோடோதைரோனைன்) மற்றும் T4 (தைராக்சின்) ஆகிய இரு ஹார்மோன்கள் குறையும் என்று பொருள். அதே நேரத்தில் TSH (தைரோட்ரோபின்) என்ற ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். பிற ஹார்மோன்கள் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதை இந்த ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது. ஒரு லிட்டர் இரத்தத்தில் 0.5 முதல் 5 மில்லி வரை தைராய்டு இருக்க வேண்டும் என்பது, உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

  இரத்தத்தில் டி.எஸ்.ஹெச் அளவை வைத்து தான், தைராய்டு சுரப்பி சரியாக இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், வயதைப் பொருத்த வரையில் இந்த அளவு மாறுபடுகிறது. குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு குறைபாடு இருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

  ஹைப்போ-தைராய்டிசம் சரியான தருணத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை எனில், சில நேரங்களில் மூளையில் கூட பிரச்னை உண்டாக வாய்ப்புண்டு. அது மட்டுமல்லாமல் உடலில் சோடியம் அளவு குறைந்து பாதிக்கப்பட்ட நபர் கோமா செல்வதற்கும் கூட வாய்ப்புண்டு. ஹைப்போ-தைராய்டிசம், ஹைப்பர்-தைராய்டிசம் ஆகியவை சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளித்தால் உயிராபத்தை தடுக்க முடியும்.

  மே 25 ஆம் தேதி உலக தைராய்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தைராய்டு சுரப்பி குறைபாட்டால் இந்தியாவில் பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின் படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....